பிரபோ கணபதே

பிரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்
சன்னதி சரணடைந்தோமே
சாந்த சித்த சௌபாக்கியங்கள் யாவையும்
தந்தருள் சற்குரு நீயே (பிரபோ)

ஆதி மூல கணநாத கஜானன
அற்புத தவள ஸ்வரூபா
தேவ தேவ ஜெய விஜய விநாயக
சின்மய பர சிவ தீபா (பிரபோ)

தேடி தேடி எங்கோ ஓடுகின்றார் உன்னை
தேடி கண்டு கொள்ளலாமே
கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய
குன்றென விளங்கும் பெம்மானே (பிரபோ)

ஞான வைராக்ய விசார சார ஸ்வர
ராகலய நடன பாதா
நாம பஜன குண கீர்த்தன நவவித
நாயக ஜெய ஜெகந்நாதா (பிரபோ)

பார்வதி பால அபார வார வர
பரம பகவ பவ தரணா
பக்த ஜன சுமுக ப்ரணவ விநாயக
பாவன பரிமள சரணா (பிரபோ)

Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies