கண்ணா ஓடி வா

கண்ணா ஓடி வா.
உனை நான் தேடவா.
உடனே ஓடி வா.
அடமே நீங்கி வா.

அப்பம் சீடை அமுதாய் செய்தேன்.
வெண்ணைக் கிண்ணம் உடன் பாலும் வைத்தேன்.
(கண்ணா ஓடி வா)

புழுதியில் விளையாடி கூடிட நீ வா.
காவிரி நீராடி குலிர்ந்திட வா.

பாத்திரம் பண்டம் எல்லாம் பந்தாட வா.
கூச்சலும் கூத்தும் வம்பும் கொண்டாட வா.

கோவில் உன் வீடு என்றால் வீடும் கோவில் தானே.
ஓடோடி வா கண்ண்னே.

வெயில் மழை பயமில்லை குடை பிடிப்பாய்.
திருடரின் களவெல்லாம் திருடி வைப்பாய்.

தன்னோடு என்னை சேர்த்து எனது என்பாய்.
தீராத கேள்வி உண்டா? பதிலுரைப்பாய்.

அன்பாய் என் தோலில் தோலாய் எல்லாம் நீயே ஆனாய்.
ஓடோடி வா கண்ண்னே.

கண்ணா ஓடி வா.
உனை நான் தேடவா.
உடனே ஓடி வா.
அடமே நீங்கி வா.

Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies