காக்கும் வடிவேல்

விழிக்கு துணை திருமென் மலர் பாதங்கள்

மெய்மைகுன்றாம் மொழிக்கு துணை, முருகா எனும் நாமங்கள்

முன்பு செய்த பழிக்கு துணை, அவன் பன்னிரு தோளும்

பயந்த தனி வழிக்கு துணை, வடி வேலும் செங்கோடன் மயூரமும்

 வண்ண மயில் ஏறும் என் தங்க வடிவேலோ

கந்தன் உன்னை காண தினம் ஓடிவருவேனோ

செந்தமிழை காக்கும் வேல், சேவல் கொடியோனோ

எண்ணி எண்ணி பாடும் என்னை

கந்தன் அறிவானோ

 

தோளிலே பால் காவடி சுமந்து

ஓடினேன் மேடு பள்ளங்கள் கடந்து

அடினேன் அவன் ஆலயம் நுழைந்து

பாடினேன் வடிவேலனை நினைத்து

 

தோளிலே பால் காவடி சுமந்து

ஓடினேன் மேடு பள்ளங்கள் கடந்து

அடினேன் அவன் ஆலயம் நுழைந்து

பாடினேன் வடிவேலனை நினைத்து

 

தந்தைக்கு உபதேசம் செய்து சுவாமிமலை ஆள்பவன் நீ

மாம்பழத்தில் கோபம் கொண்டு பழனி மலை ஆண்டவன் நீ

பொங்கு கடல் ஓரமாக செந்தூரிலே வாழ்பவன் நீ

வள்ளி தெய்வயானையுடன் திருத்தணிகை நாயகன் நீ

தனக்கொரு தனித்துவ படையென நிலமென

வான் மயில் ஏறியவன் முருகன் பாதங்கள் சொன்ன மகன்

யாரும் எனக்கில்லையென நாதியற்று நான் கலங்க

ஆறுதல் தந்த மகன் முருகன் ஆறுதோள் வென்ற மகன்

 

வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா

 

வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா யாரையா

 

பொதிகையில் பிறந்து முருகன் வளர்ந்த கதையும்

பிரணவ பொருள் மறந்ததில் வேல் சினத்தன்று கொடுத்த சிறையும்

வள்ளி தெய்வானையுடனே காட்சி அருளும்

தணிகையின் நாயகன் உன்னை காண்கையில் இன்னல் ஓடி மறையும்

 

எந்தனை ஆளும் சுந்தர வேலும்

சேவல் கொடி ஏறும் செந்தமிழ் நாடும்

கந்தனை பாடும் எந்தனின் நாவும்

பாடும் பொழுதொரு துன்பங்கள் தீரும்

 

குமரனை கண்டதும் எனக்கு கவலை இல்லடா

குன்றத்துக்கு குமரன் எல்லடா

என்றைக்குமே முருகனை நான் மறந்ததில்லடா

அந்தி அடங்கா நான் கடம்பன் புள்ளடா

கடம்பனை மறந்ததில்லடா

மண்டியிட்டு மண்ணில் விழ என்ன விட்டதும் இல்லடா

அஞ்சி அடங்கா நான் அரக்கன் அல்லவா

அருந்தமிழ் கிறுக்கன் அல்லவா

ஆறுமுகன் ஆளும் மண்ணில் வாழும் தமிழன் அல்லவா

 

ஆக்குற ஆறிரு தோளுடன்

காக்குற கருணையின் வேல் அது

அய்யனின் பன்னிரு கைகளும்

காக்குற கடமையில் பாயுது

குற்றம் குறை சற்றும் இனி தொட்டும் தொடராமல்

எனை காக்கும் கந்த கடம்ப பழனி பதிவாழ் முருகா…

 

வெட்டுப்பற அடிமுழங்குது வெற்றி வேலாயுதன் படை இறங்குது

முட்டும் கடல் முன்தி அடிக்குது கந்தனை காண கண் தேடி துடிக்குது

காலடிகள் தாண்டி தூக்கிய காவடிகள்

கடம்பனை போற்றிய காவடிகள்

சக்திக்கிரை முத்துக்குமரனின் முத்தமிழ் பேரலைகள்

 

வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா யாரையா

 

வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா யாரையா

Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies