ஜலகண்டேசுவரர் கோயில், வேலூர்

jalakandeswarar temple vellore

படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

 

Google Map Image

 

 

 

 

Recommended for you

 

 

Video - Jalakandeswarar Temple, Vellore 

 

Jalakandeswarar Temple, Vellore

 

 

இத்திருக்கோயில் வேலூர் நகரிலுள்ள வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. இக்கோட்டையும், இக்கோட்டை பகுதியிலுள்ள கோயிலும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளவை.
கி.பி 9ம் நூற்றாண்டில் சோழ பேரரசு பரகேசரிவர்மன் விசயாலாயன் தலைமையில் தோன்றி வளர்ச்சியுற்றது. அம்மன்னன் மகன் பராந்தகன் பரகேசரி வேலூரைச் சுற்றியுள்ள பகுதியைத் தமது ஆட்சியின் கீழ்க்கொண்டு வந்தான். பிற்காலத்தில் தொண்டை நாட்டை கைக்கொண்ட ஆட்சியாளர்களிடம் வேலூர் கோட்டை இருந்து வந்தது. வேலூரின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி விஜயநகரமன்னர் காலத்தில் தோன்றிற்று.
விஜயநகர மன்னன் தமிழ் மண்டலத்திற்கு சந்திரகிரியைத் தலைநகராக்கி அதன் பொறுப்பைத் தம் கடைசி மகன் வேங்கடபதியிடம் ஒப்புவித்தார். இவ்வேங்கடபதி மன்னர் விஜயநகர ஆட்சியை நிலைப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டார். சந்திரகிரியைத் தலைநகராக கொண்டிருந்த இவர் வேலூரை இரண்டாம் தலைநகராக மாற்றினான். வேலூர் கோட்டையை அமைத்தான். சூரியகுண்டம் என்னும் குளத்துநீர் இக்கோட்டையின் அகழிக்கு பாய்ந்தது. வேங்கடபதி மன்னர் வேலூர் மன்னர் எனப் புகழப்பெற்றார். அவர் காலத்தில் வேலூர் கோட்டைப் பகுதியில் ஜலகண்டேசுவரர் கோயில் அமைக்கப்பட்டது. இவர் காலத்தில் பொம்ம நாயக்கர் என்னும் சிற்றரசர் இருந்தார் என்பதை ஜம்பைக் கல்வெட்டுத்தெரிவிக்கிறது. இவரே ஜலகண்டேசுவரர் கோயிலை நிறுவியவர். நுழைவாயிலில் பொம்மநாயக்கர் தம் துணைவியுடன் சிற்பவடிவில் காட்சி தந்து கொண்டிருக்கிறார்.

இத்திருக்கோயிலின் கிழக்கு கோபுர வாயிலுக்கு நேர் மேற்கில் ஒரு வாயில் கிழக்கு நோக்கியவாறு இருக்கின்றது. இதில் நுழைந்தால், கிழக்கு பிராகாரத்தில் உள்ள விநாயகர் சந்நிதியை அடையலாம். இதற்கு வடக்கில் சப்தமாதர் திருவுருவங்கள், அறுபத்துமூவர் திருவுருவங்கள், வீரபத்திரர் திருவுருவம் தெற்கு நோக்கியுள்ளன. தெற்கு பிரகாரத்தில் அருள்மிகு விநாயகர் சந்நிதி, அடுத்து அருள்மிகு சீனிவாசப்பெருமாள், சண்முகர், ஆகியவை உள்ளன. தென்மேற்கு கோடியில் அருள்மிகு இலட்சுமி, அருள்மிகு சரசுவதி ஆகியோர்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இவை வடக்கு நோக்கியுள்ளன. மேற்குபிராகாரத்தில் அருள்மிகு அகிலாண்டேசுவரி சந்நிதி வடக்கு நோக்கியுள்ளது. இதற்கு எதிரில் நவசக்தி தீபம் உள்ளது. 9 அகண்டத்தில் தீபம் எரிந்து கொண்டேயிருக்கிறது. வடக்கு பிராகாரத்தில் பைரவர் சந்நிதியும் இதனையடுத்துச் சனீசுவரர் சந்நிதியும் தெற்கு நோக்கியுள்ளன.
கோட்டையின் மையமான வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயில் இதுவாகும்.
இத்திருக்கோயில் ஏழுநிலைகள் கொண்ட கோபுரம் ஒன்பது கலசங்களுடன் 30 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மூன்றாம் பிராகாரத்தின் நாற்புறங்களிலும் மண்டபங்களுடன் மேடைகள் உள்ளன. இரண்டாம் பிராகாரம் திறந்த வெளியாக உள்ளது.
கருவறைப்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலின் வழியாகக் கோயிலின் கருவறையை வலம்வரும்போது கிழக்கிலுள்ள முதற்பிராகாரத்தில் உற்சவர்கள் சந்நிதியைக் காணலாம். கருவறை கோஷ்டச் சுவர்களில் தெற்கில் விநாயகரும், தட்சிணாமூர்த்தி திருவுருவமும் மேற்கில் திருமால் திருவுருவமும் வடக்கு பிராகாரத்தில் பிரம்மதேவர், துர்க்கை ஆகியோர் திருவுருவங்களும் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் அருள்மிகு சண்டேசுவரர் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருவறையின் முன்பகுதியின் வடபுறத்தில் நடராசர் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. இத்திருக்கோயில் அழகிய சிற்பக்களஞ்சியமாக ஆகும். கோபுரத்தின் முன்பக்கம் மிக எடுப்பாக இருப்பது போன்று ஏனைய பக்கங்களும் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2022 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize