வில்வ இலை மகிமை

Bilwa

 

சிவனின் ஆராதனையில் வில்வ இலையின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்தது.

இந்த கட்டுரையில் வில்வ இலையின் தெய்வீக அம்சங்களைப் பற்றிப் பார்ப்போம்.

 

Click below to listen to பில்வாஷ்டகம்  

 

பில்வாஷ்டகம்

 

வில்வ இலையின் தாவரப்பெயர்

ஏகல் மர்மேலோஸ்(aegle marmelos).

 

வில்வ மரத்தின் தோற்றம்

வில்வ மரத்தின் தோற்றம் எப்படி என்று கிருஷ்ண யஜுர் வேதம் கூறுகிறது. 

முன்பு ஒரு காலத்தில் சூரியன் பிரகாசிப்பதை நிறுத்திவிட்டார். 

அப்போது தேவர்கள் யாகம் செய்து சூரிய தேவனைச் சந்தோசப்படுத்தினர். 

அதன் பிறகு சூரியதேவன் மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கினார். 

அதனுடன் வெளிவந்தது இந்த வில்வ மரமாகும்.

 

யாகத்தில் வில்வமரத்தின் உபயோகம்

இந்த வில்வ மரத்தினை யாகத்தில் உபயோகித்தால் அதன் பலன் மிகவும் பிரமாதமாக அதிகரித்தது. 

சதபதப்ராஹ்மணத்தில் வில்வ மரம் பிரஜாபதியின் மஜ்ஜையிலிருந்து வெளிப் பட்டதாகக் கூறப்படுகிறது.

வில்வத்தின் மகிமையை வேதங்கள் பிரம்ம ஒளியை அடைவதுடன் ஒப்பிடுகிறது.

யாகத்தில் வில்வத்தைப் பயன்படுத்தும்போது மிகுதியான உணவையும் செழிப்பையும் சக்தியையும் மற்றும் சந்ததியையும் அருள்கிறது.

அதர்வ வேதம் வில்வத்தை இவ்வாறு விவரிக்கிறது: மஹா வை பத்ரோ வில்வ: - வில்வம் நல்லதும் பெரியதும் ஆகும்.

கருவிகளை உருவாக்குவதற்கு மற்றும் பாத்திரங்களாகவும் யாகத்திற்கு பயன்படுகிறது.

வில்வம் ஒரு யாக மரமாகும். 

அது யாகத்திற்காகப் பாத்திரங்களையும் கருவிகளும் செய்யப் பெரிய அளவில் பயன்படுகிறது.

இதற்காகப் பயன்படும் மற்ற மரங்களின் வகைகள்: போதி(ficus religiosa), அத்தி(ficus glomerata),குமிழ்(gmelina arborea)கருங்காலி(acacia catechu), பலாசம்(butea frondosa),காட்டு வாகை(flacourtia sapida),வன்னி(prosopis spicigera).

வில்வம் யூபம், தண்டம், சுக்கிரபாத்திரம் செய்வதற்குப் பயன்படுகிறது. 

அவை பரிதி மற்றும் சமித்து குச்சிகளாக நெருப்பை மூட்டுவதற்குப் பயன்படுகிறது. 

பல சடங்குகளில் அரிசி உணவைத் தயாரிக்கும் பாத்திரம் வில்வப் பழத்தின் அமைப்பை கொண்டுள்ளது. 

இந்த எண்ணம் வில்வமரத்தின் தெய்வீக குணத்தை அரிசிக்கு வழங்கினர்.

ஸ்ரீ பல-க்ரிச்ச்ர விரதத்தில் விரதம் இருப்பவர் லட்சுமி தேவியை வில்வமரத்தின் அடியிலிருந்து

வழிபடுகின்றனர். 

அவர் அந்த மரத்தின் அடியில் உறங்கி அதன் பழத்தை மட்டும் உண்டு வாழ்ந்தார். வில்வம் பாதுகாப்பு கவசம் தயாரிப்பதிலும் பயன்படுகிறது.

 

வில்வ உபநிடத்

வில்வத்தின் மகிமையை வில்வ உபநிடத்து விளக்கமாகச் சொல்லுகிறது.

வில்வ உபநிடத்தில் சிவபெருமான் தாமே வாமதேவ முனிவருக்கு வில்வமரத்தின் பெருமைகளைப் பற்றிக் கற்பித்ததாக உள்ளது.

பிரம்மதேவன் வில்வ இலையின் இடது புறத்திலும், விஷ்ணு பகவான் வில்வ இலையின் வலது புறத்திலும், சிவபெருமான் இலையின் நடுவிலும் வசிக்கின்றனர். 

மற்ற அனைத்து தேவர்களும் இலையின் காம்புப் பகுதியில் இருக்கின்றனர்.

மூன்று இலைகள் ஒரே காம்பில் இணைவது இதை குறிக்கின்றது.

  1. மும்மூர்த்திகளும் ஒரு உயர்ந்த உண்மையின் மூன்று அம்சங்களாகும்.

2.சாத்வீக, ராஜச மற்றும் தாமச குணங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.

  1. இச்சாசக்தி, ஞானசக்தி மற்றும் க்ரியாசக்திகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.

வில்வ இலையின் பின்பாகத்தில் அமிர்தம் உள்ளது. 

ஆகையால்தான் சிவலிங்கத்திற்கு எப்பொழுதெல்லாம் பூஜை செய்யும்போதும் வில்வ இலையின் முகம் மேல்நோக்கி இருக்கும் படி செய்ய வேண்டும். 

அதன் பின்பாகம் லிங்கத்தின் அல்லது மூர்த்தியின் மீதுதொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.

இறைவன் சிவனின் வழிபாடு வில்வ இலையால் பூஜை செய்யாமல் பூர்த்தியாகாது. 

வில்வ இலையால் பூஜிக்குபோழுது நிம்மதி,சந்தோஷம் மற்றும் மோக்ஷம் கிடைக்கிறது. 

நம்முடைய எல்லா பாவத்திலிருந்தும் நம்மை விடுவிக்கிறது. 

வில்வ இலையால் இறைவன் சிவனை வழிபடும் போது நமக்கு தீர்த்தாடனம் செல்லும் பலன், தானம் செய்யும் பலன், தவம் செய்யும் பலன், யோகம் செய்யும் பலன் மற்றும் வேதம் கற்கும் பலன் கிடைக்கிறது.

லட்சுமி தேவி வில்வ இலையில் வாசம் செய்கிறாள். 

வில்வப் பழத்திற்கு ஸ்ரீபலம் என்ற பெயர்.

ஸ்ரீஸூக்தத்தில் கூறப்படுவது- तव वृक्षोऽथ बिल्वः तस्य फलानि तपसा नुदन्तु. யாதெனில் வில்வ பழம் அனைத்துத் தடைகளிலிருந்து நம்மை காக்கிறது.

லட்சுமிதேவியை சாந்தப்படுத்துவதற்க்கு ஹோமத்தில் வில்வ மரத்தின் பழங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது.

 

 

Copyright © 2023 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |