விரத கல்ப த்ரயம் (பூஜை முறைகளும் கதைகளும்)

விரத கல்ப த்ரயம் (பூஜை முறைகளும் கதைகளும்)

ஸ்ருதிர் விபிந்நா ஸ்ம்ருதயோ விபி.ந்நா: நைகோ முநி: யஸ்யமதம் ப்ரமாணம் 1 தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம்
மகாஜநோ யேந கத: ஸபந்த ||
சுருதிகளும் ஸ்ம்ருதிகளும் ஒன்றுபோலக் கூறாமல் பலவாறாகப் பணிக்கின்றன தருமத்தின் தத்துவங்களை. முனிவர்களும் அவ்வாறே கூறுகின்றனர். யாருடைய மதத்தை (கொள்கையை) 'இதுவே நமக்குப் பிரமாணம்' என்று எடுத்துக் கொள்வது? புரியவில்லை. தருமத்தின் உண்மைக் கருத்துக்களோ மிகமிக மறைவாக வைக்கப்பட்டுள்ளன. என் செய்வதென்று புரியவில்லையே எனில், அதற்கான விடை இதுதான். நம் முன்னோர்களான பெரியோர்கள் எவ்வழியைப் பின்பற்றி, எவ்வொழுக்கத்தைப் பின்பற்றி வாழ்ந்து நன்னிலை அடைந்தார்களோ, அந்நன்னெறியே நமக்கும் தஞ்சம். அவ்வழிதான் நமக்கு மேன்மை அளிக்கும் என்கிறது, ஸ்ரீமகாபாரதம்.
யேநாஸ்ய பிதரோ யாதா: யேந யாதா; பிதாமஹா: 1 தேந மார்க்கே,ண கந்தவ்யம் மார்க ஸ்தோ நாவஸீத.தி II
எவ்வழியை அடியொற்றி தன் தந்தையும், அவர் தந்தையும் சென்றார்களோ அவ்வழியில் செல்வதே நலம் பயக்கும். அது அகலப்பாதையானாலும் சரி; ஒற்றையடிப் பாதையானாலும் சரி. அதில் செல்ல முள், கல் முதலியன குத்தாது. குந்தி நடக்காது நிமிர்ந்து செல்லலாம். தடைகள் தடுக்கப்பட்ட தகுந்த பாதை அதுதான்.
பாதை
இவ்வாறு மறைபொருளாகக் குறிக்கப்பட்ட யாதாகவிருக்குமோ என அஞ்ச வேண்டாம். அதுவே ஞானமார்க்கம்
கருமமார்க்கம்.
பலவாறான கருமமார்க்கங்களைப் பலகாலம் அனுஷ்டித்து, அதன் பயனாகப் பெறுவதாகும். பறவை பறந்து கொண்டே மரத்திலுள்ள பழத்தைக் கொத்தித் தின்கிறது. எறும்பு ஆற அமர நிதானமாக மரத்திலேறி பழத்தினுள்ளேயே அமர்ந்து பழத்தைச் சுவைக்கிறது. பறவை நிலைகொள்ளாது அலமாந்து சுவைக்கிறது. பறவையின் நிலை ஞானமார்க்கம், எறும்பின் நிலை கருமமார்க்கம். நாமோ முற்பிறவிகளில் புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மளிதராய் எனப் பல்கோடிப் பிறவியெடுத்து, இன்று மனிதராகி நிற்கிறோம். மக்கள் மாக்களாக (விலங்காக) இன்றி மக்களாகவே வாழ இக்கருமயோகம் கருமமார்க்கம் இன்றியமையாதது. அம்மார்க்கமோ மூவகைத்தது. நித்தியம், நைமித்திகம். காம்யம் என.
தினமும் தவறாது செய்ய வேண்டிய சந்தியாவந்தனம் முதலியன நித்திய கருமம்.
தினமும் செய்ய வேண்டாது ஏதோவொரு விசேஷ தினத்தில், அதாவது குறித்த காலத்தில் மட்டும் செய்யப்படும் சூரிய-சந்திர கிரகணம், அமாவாசை முதலிய நாட்களில் செய்வது நைமித்திக கருமம்.
நிறைசெல்வம் பெற வேண்டும்; நோயகல வேண்டும்; பகை வெல்ல வேண்டும் போன்று பயன் கருதிச் செய்வது காம்ய கருமம்.
இதன்படி நாம் செய்யும் ஸ்ரீகணபதி விரதம், ஸ்ரீவரமகாலக்ஷ்மி விரதம் முதலியன காம்ய கருமங்களைச் சாரும், இனி, 'விரதம்' என்றால் என்ன? என்பதைச் சற்று ஆராய்வோம்.
'கர்த்தவ்ய விஷயே நியத: ஸங்கல்ப: வ்ரதம்' - 'தான் மேற்கொண்ட செயலில் மனமார உறுதியுடன் நிலைநிற்றல்' என்பதே 'விரதம்' என்பதன் பொருள். விரதம் அனுஷ்டிப்பதிலும் இது செய்யலாம், இது செய்யக்கூடாது என்ற விதி நிஷேதங்களுண்டு. இது சாஸ்திரத்தின் நியதி. விரதம் மேற்கொள்ளும் தினங்களில் நொடிக்கொருதரம் நீர் அருந்துவது. பகற்தூக்கம். பெண் சேர்க்கை, தாம்பூலம் போட்டுக் கொள்வது முதலியன தவிர்க்க வேண்டியன, மாமிசம் உண்பவர்களும் அன்றைய தினம் அதைத் தவிர்க்க வேண்டும்.
எல்லா
விரதம் அனுஷ்டிக்க இந்த வருணத்தார். இந்த ஆசிரமத்தார் என்கிற கட்டுப்பாடு இல்லை. வருணத்தாரும், ஆண்-பெண் என்ற இருபாலாரும் செய்யலாம். ஆயினும் சில தகுதிகளைப் பெரியோர்கள் நிச்சயித்துள்ளனர். அவை:- தத்தம் வருணாசிரம நெறிமுறைகளைத் தவறாது முறைப்படி ஆற்றுபவர்; அகத்தூய்மையும் புறத்தூய்மையும் உடையவர்; உண்மை பேசுவோரும் புறங்கூறாதவரும்; அளைத்துயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பவர்; அன்புள்ளங்கொண்டோர்; ஈடுபாடுடையவர்; பாவங்கண்டு அஞ்சுபவர்; சினம் தவிர்த்தோர்; தானென்னும் செருக்கறுத்தவர்; வேத சாஸ்திரங்களையும் அதனைக் கற்றோரையும் தூற்றாது போற்றிப் பேணுபவர் இவர்களே விரதமனுஷ்டிப்பவர். இவையே மேற்கொள்ள வேண்டிய நியதிகள். பெண்கள் தனித்துச் செய்யும் சில விரதங்களும் உண்டு. ஸ்ரீவரமகாலக்ஷ்மி விரதம் போன்றன. அப்பொழுது, தன் கணவரது அனுமதி பெற்றுச் செய்யின், அது பன்மடங்கு அதிகப் பயன் தருவதாக ஆகும்.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

தமிழ்

தமிழ்

ஆன்மீக புத்தகங்கள்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara test | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...

We use cookies