யுகம்

Other languages: MalayalamTeluguKannada

யுகங்களின் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வதற்கு முன்பு, எவ்வாறு புராணங்களிலும், இதிகாசங்களிலும் நேரத்தைக் கணக்கிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

கல்பம் என்பது என்ன?

இந்தப் பிரபஞ்சம் ஒருமுறை உருவாக்கப்பட்ட பின் 432 கோடி ஆண்டுகள் நிலைத்து நிற்கின்றது. இந்த இடைப்பட்டக் காலத்தை கல்பம் என்று அழைக்கிறார்கள். அதன் பிறகு நைமித்திகப் பிரளயம் உருவாகிறது.

மன்வந்தரம் என்றால் என்ன?

ஒரு கல்பகாலத்தில் 14 மன்வந்தரங்கள் இருக்கின்றன.

சதுர்யுகம் அல்லது மகாயுகம் என்றால் என்ன?

ஒரு மன்வந்திரத்தில் 71 சதுர்யுகங்கள் அல்லது மகாயுகங்கள் உள்ளன. க்ருதயுகம், திரேதாயுகம், த்வாபரயுகம் மற்றும் கலியுகம் என்ற நான்கு யுகங்களும் சேர்ந்து சதுர்யுகமாகும். இந்நான்கு யுகங்களும் மீண்டும், மீண்டும் மாறி இவ்வரிசையில் வரும். க்ருதயுகம், சத்யயுகம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு யுகத்தில் எவ்வளவு வருடங்கள் உள்ளது?

  • கிருதயுகம்- 17,28,000 வருடங்கள்.
  • திரேதாயுகம்- 12,96,000 வருடங்கள்.
  • த்வாபரயுகம்- 8,64,000 வருடங்கள்.
  • கலியுகம் - 4,32,000 வருடங்கள்.

இப்பொழுது எந்த யுகம் நடந்து கொண்டிருக்கிறது?

இப்போது நடந்து கொண்டிருக்கும் கல்பத்தின் பெயர் ஸ்வேதவராஹம். இதில் ஏழாவது மன்வந்தரம் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு வைவஸ்வத மன்வந்தரம் என்று பெயர். இதில் இருபத்திஎட்டாவது சதுர்யுகம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்பொழுது கலியுகம், கி.மு 3102 வருடங்களுக்கு முன்பு தொடங்கிவிட்டது. இது கி.பி. 4,28,899 வருடத்தில் முடிவுறும்.
இப்பொழுதுள்ள கி.பி. 2021ன் படி இந்தப் பிரபஞ்சம் உருவாக்கபட்டு 1,96,08,53,123 வருடமாகிவிட்டது.

Author

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Recommended for you

முருகரின் ஆசீர்வாதம் கேட்டு ப்ரார்த்தனை

Audios

Copyright © 2022 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Active Visitors:
2615078