பெருமாள் என்னும் பெயர் ஸ்ரீ வைஷ்ணவர்களால் ஸ்ரீமன் நாராயணனை அழைக்கும் பெயராகும். நாம் இப்போது பெருமாளை பற்றிய கருத்துகளையும் அதன் காரணங்களையும் 4000 திவ்யப் பிரபந்தத்தின் அடிப்படையில் காண்போம்.

பெருமாள் என்பதின் பொருள்
பெருமாள் என்ற பெயரின் அர்த்தம் இரண்டு வகையில் விளக்கப்படுகிறது.
- பெரும் என்றால் உயர்ந்தது. ஆள் என்றால் மனிதன். அதாவது உயர்ந்த மனிதன். மனிதர்களில் உயர்ந்தவன். புருஷோத்தமன்-புருஷர்களில் உயர்ந்தவன்.
- பெரு என்றால் உயர்ந்த, மால் என்றால் விஷ்ணு. விஷ்ணுவிற்குத் தமிழில் மால் என்ற ஒரு பெயரும் உள்ளது. பெருமால் தான் பெருமாள் ஆக மாறியது. ஆகவே பெருமாள் என்பது மகாவிஷ்ணுவைக் குறிப்பதாகும்.
திருமால் என்பதின் பொருள்
திரு என்றால் லக்ஷ்மி. மால் என்றால் நாராயணன். ஆகவே திருமால் என்றால் லக்ஷ்மி- நாராயணன் ஆகும்.
நாராயணன் என்பதன் பொருள்
நாரம் என்றால் சம்ஸ்கிருதத்தில் தண்ணீர் என்று பொருள். அயனன் என்றால் இருப்பவர் என்று பொருள். எவரொருவர் தண்ணீரில் இருப்பிடத்தைக் கொண்டிருக்கிறாரோ, அவருக்கு நாராயணன் என்று பெயர்.
பெருமாள் அந்த பாற்கடலையே தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டவர். அவர் ஆதிசேஷன் நாகத்தின் மேல் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.
பின்பு வைகுண்டம் என்றால் என்ன?
வைகுண்டம் என்பது பெருமாளின் நிரந்தர இருப்பிடம் ஆகும். அவர் பலவிதமான காரணங்களைக் கொண்டிருப்பவர். அவற்றில் ஒன்று, இந்த உலகின் படைத்தலுக்கும், காத்தலுக்கும், அழித்தலுக்கும் காரணம் அவர்தான். இவ்வுலகம் அழிவிற்குப் பிறகு, இவ்வுலதின் இடத்தில் தண்ணீர் மட்டும்தான் இருக்கும்.
அப்பொழுது பெருமாள் ஆதிசேஷனைத் தனது படுக்கையாக்கிக் கொண்டு சமுத்திரத்தின் மத்தியில் அமர்ந்திருந்தார். இந்த நிலையில் உள்ள பெருமாளே நாராயணன் என்று அழைக்கப்பட்டார்.
பின்பு எப்பொழுது படைக்கும் தொழில் மீண்டும் தொடங்கியதோ, அப்பொழுது பெருமாளின் தொப்புள் கொடியிலிருந்து தோன்றிய தாமரையின் மீது அமர்ந்திருக்கும் பிரம்மாவைப் படைத்து, உலகத்தின் படைப்பு தொடங்கியது.
எவ்வாறு ஆழ்வார்கள் பெருமாளைக் கடவுள்களில் தலைவனாக விளக்கமளித்து இருந்தனர்
- ஆழ்வார்களுக்குப் பெருமாள் இருப்பதை நிரூபிப்பதற்கான தேவை தோன்றவில்லை.
- அனைத்தும் பெருமாளின் வெளிப்பாடாகவே இருந்தது.
- பெருமாள் ஒரேநேரத்தில் பரப் பிரம்ம சுவரூபியாகவும் தனிப்பட்ட கடவுளாகவும் இருக்கிறார்.
- நம்மாழ்வார் பெருமாளை அவன் என்று சொல்லி இருப்பதிலிருந்து அவர்களின் தனிப்பட்ட தெய்வமாக இருப்பதை அறிய முடிகிறது.
- பெருமாள், நாராயணனாக மூன்று மூர்த்திகளின் வடிவமாக இருக்கிறார். பெருமாள் பிரம்மாவைப் படைத்தார். ருத்திரன் பிரம்மாவுடன் சேர்ந்து இருப்பவர்.
- பிரம்மாவும் ருத்திரனும் பெருமாளிடமிருந்து தோன்றியதால் பெருமாள் கடவுள்களின் உயர்ந்த தலைவனாக இருக்கிறார்.
- நம்மாழ்வார் கூறுகிறார்- பெருமாள் என்பவர் அவருக்கு அவரே நிகரானவர், அவரைவிட உயர்ந்தவர் யாருமில்லை.
- பிரம்மா இவ்வுலகத்தைப் படைக்கிறார், ருத்திரர் இவ்வுலகத்தை அழிக்கிறார். பெருமாள், அவரே இவ்வுலகத்தைப் படைப்பு முதல் அழிவு வரை நடத்திச் செல்கிறார்.
- பிரளயத்தின் பொழுது பெருமாள் அனைத்து தேவர்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்கிறார். அவர்கள் அனைவரும் மீண்டும் இவ்வுலகம் தோன்றும்போது அவரின் உள்ளேயிருந்து வெளி வருகின்றனர்.
- அர்ஜுனன் இறைவன் வாமனனின் பாதத்தில் சமர்ப்பித்த பூமாலையை பிறகு இறைவன் சிவனின் தலையில் அணிந்திருப்பதைப் பார்த்ததாக நம்மாழ்வார் கூறுகிறார்.
- ஆழ்வார்கள் சிவன், பெருமாளின் இடது புறத்தில் இருப்பதாகவும், பிரம்மா மற்றும் இவ்வுலகம் பெருமாளின் தொப்புளில் இருப்பதாகவும் சித்தரிக்கின்றனர்.
- மற்ற அனைத்து கடவுள்களும் பெருமாளை புகழ்த்தியும் வணங்கியும் இருக்கின்றனர்.
மற்ற அனைத்து கடவுள்களும் பெருமாளின் வாயிற்படியில் அவருடைய தாமரைப் பாதங்களில் சேவை செய்வதற்காகப் பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
- பிரம்மாவும் ருத்திரரும் கூட பெருமாளின் பெருந்தன்மையை அறிந்து கொள்ள முடியாது என்று நம்மாழ்வார் கூறுகிறார்.
- பெருமாளின் நாபிக்கமலத்தில் அமர்ந்திருக்கும் பிரம்மனால் கூட அவரின் தாமரைப் பாதங்களைக் காண இயலாது என்று திருமழிசை ஆழ்வார் கூறுகிறார்.
- பெருமாள் என்பது நாராயணனும் லக்ஷ்மியும் இணைந்தது.
- பெருமாள் மற்றும் தாயாரின் ( லட்சுமி தேவி ) இணைந்த தெய்வீகத் தன்மை தான் ஆழ்வார்களை 4000 திவ்விய பிரபந்தம் எனும் 4000 பாடல்களின் தொகுப்பை இயற்றத் தூண்டியது.
- முதல் மூன்று ஆழ்வார்களின் பிரபந்தம் பெருமாள் மற்றும் தாயாரின் முன்னால் பாடப்பட்டது.
- பேயாழ்வார் பெருமாளைப் பார்க்கும் பார்வை பெற்றிருந்தார்.
- நம்மாழ்வார் பெருமாளை மாதவன் அதாவது தாயாரின் கணவன் என்று கூறுகிறார்.
- தாயாருடன் தொடர்பில்லாத மற்ற கடவுள்கள், கடவுள்கள் அல்ல என்று திருமழிசை ஆழ்வார் கூறுகிறார்.
பூதேவியும் கடவுளின் துணைவியே
வராக அவதாரத்தில், பெருமாள் பூமி தேவியைக் காப்பாற்றிய பின்னர் அவரும் பெருமாளின் துணைவியாகிறார். தாயாரும் மற்றும் பூதேவியும் இறைவனின் தாமரைப் பாதங்களில் பணிவிடை செய்கின்றனர்.
பெருமாளின் உடற் தோற்றம்
- பெருமாள் நான்கு கைகளை உடையவர்.
- பெருமாள் தன்கையில் சங்கு சக்கரம் மற்றும் கதை வைத்திருக்கிறார்.
- பெருமாள் தன்னிடத்து வாளும்,வில்லும் ஆயுதமாக வைத்திருக்கிறார். வாளின் பெயர் நந்தகம் மற்றும் வில்லின் பெயர் சாரங்கமாகும்.
- பெருமாள் கழுத்தில் அணிந்திருக்கும் துளசி மாலை ஆனது தனித்தன்மையும் புகழும் வாய்ந்தது.
- கருடன் இவரின் வாகனம் மற்றும் கொடியிலுள்ள சின்னமுமாகும்.
- அவருடைய படுக்கை ஆதிசேஷனாகும்.
- பெருமாள் அவருடைய மார்பில் கௌஸ்துபம் என்னும் ரத்தினத்தை அணிந்திருக்கிறார்.
- அவர் தன் மார்புவரை ஸ்ரீவத்சம் என்று சொல்லப்படும் சுருள் முடியைப் பெற்றிருக்கிறார்.
- பெருமாளின் வஸ்திரம் பொன் போன்ற மஞ்சள் நிறம் உடையது.