அம்மன் - அங்காள பரமேஸ்வரி.
இங்கு நடராஜர் தாண்டவராயனாகவும் மற்றும் விநாயகரும் உள்ளனர்.
முன்னொரு சமயதில் சிவனும், அம்மனும் ஆணாகவும், பெண்ணாகவும் மாறி பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பூங்காவனம் என்ற இடத்தை அடைந்தபொழுது, அம்மனுக்குத் தாகம் ஏற்பட்டது.
சிவன் கூவம் ஆற்றில் நீர் எடுத்து வர சென்றார்.
அப்பொழுது மழை வேகமாகப் பெய்யத் தொடங்கிய காரணத்தினால் கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஆற்றின் தண்ணீரின் அளவு குறைவதற்காகச் சிவன் அங்கே வெகுநேரம் காத்திருந்தார்.
சோர்வடைந்த அம்மன் அங்கேயே படுத்துவிட்டாள்.
அவள் எரும்புப் புற்றாக மாறி இருந்தாள்.
அந்த எறும்புப் புற்றின் காரணமாக அவ்விடம் புற்றூர் என்று பெயர் பெற்றது.
காலமாற்றத்தினால் அது புட்லூர் என்று மாறிவிட்டது.
சிவன் அங்குத் திரும்பி வந்த பிறகு அம்மனை பார்க்க முடியவில்லை.
இதனால் மனம் துவண்டு தாண்டவம் புரிந்தார்.
அங்கு பொன்மேனி எனும் விவசாயி வாழ்ந்திருந்தார்.
அவர் மஹீசுரன் என்னும் வட்டி காரனிடம் கடன் பெற்றிருந்தான்.
அவனால் கடனை சரியான நேரத்தில் திருப்பித் தர இயலவில்லை.
மஹீசுரன், பொன்மேனியை ஓர் இரவுக்குள் பூங்காவனத்தை விவசாய நிலமாக மாற்றித் தரவில்லை என்றால் அவனைக் கொன்றுவிடப் போவதாக மிரட்டினான்.
பூங்காவனம் ஒரு காடாகும்.
அங்கு பல பயங்கரமான துராத்மாக்கள் இருந்தன. பொன்மேனிக்கு அவ்வாறு செய்வது இயலாத காரியம் என்று தெரியும்.
ஆகையால் அம்மன் அங்காள பரமேஸ்வரியை வேண்டிக்கொண்டு அவ்விடத்தை மாற்றத் தொடங்கினான். அச்சமயத்தில் ஒரு ஆணும் ஒரு கர்ப்பவதியும் அவ்விடத்திற்கு வந்தனர்.
அவர்கள் தண்ணீர் கேட்டனர்.
பொன்மேனி தண்ணீர் எடுத்து வருவதற்குள், அவர்கள் மறைந்து விட்டனர்.
அப்போது வந்த இருவரும் சிவனும், அம்மனும் என்று ஒரு குரல் கேட்டது.
அம்மன் அங்கேயே எரும்பு புற்றாக நிரந்தரமாக இருந்துவிட்டாள்.
எறும்பு புற்று தரையிலிருந்து மேல் நோக்கி முளைத்து இருந்தது.
அங்கு அம்மன் இருப்பது பொன்மேனியின் மூலமாக வெளி உலகுக்குத் தெரிய வந்த காரணத்தால், அம்மன் அவனை ஆசீர்வாதம் செய்து, நிறைய செல்வங்களை அளித்தாள். இச்சம்பவம் நடைபெற்ற இடம் பூங்காவனமாகும்.
புட்லூர் அம்மனின் தோற்றம், கர்ப்பவதியான பெண் வாயைத் திறந்து தரையில் படுத்து இருப்பதை போன்ற எரும்பு புற்று தோற்றத்தை கொண்டிருக்கிறது.
பெண் பக்தர்கள் நிறைய பேர் குழந்தை வரம் வேண்டி புட்லூர் அம்மன் கோவிலுக்கு வருகின்றனர்.
குழந்தை வரம் வேண்டி விருப்பமுள்ள பெண் பக்தர்கள் 5 எலுமிச்சம்பழங்களும் வளையல்களும் வெளியே உள்ள கடைகளிலிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு எலுமிச்சம்பழம் கொண்டு கோவிலில் உள்ள வயதான பெண் பக்தர்களின் மூலம் கண்திருஷ்டி கழிக்க வேண்டும். திருஷ்டி எடுத்த பெண் அதை காலின் அடியில் வைத்து நசுக்கி விட வேண்டும்.
கொடிக்கம்பத்தின் அடியில் ஒரு திரிசூலம் உள்ளது.
பக்தர்கள் 3 பழங்களை அந்த திரிசூலத்தில் குத்தி விட வேண்டும்.
அங்கு அவர்கள் ஒரு துணியையும் கட்டிவிட வேண்டும். ஐந்தாவது எலுமிச்சை பழத்தைக் கோவில் பூசாரியிடம் கொடுத்துவிட வேண்டும்.
அவர் அதை குங்குமத்துடன் கலந்து அம்மன் பாதத்தில் வளையல்களுடன் வைப்பார். எலுமிச்சை பழம் உருண்டு விழும் பொழுது அது பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது.
அதை நாம் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வரவேண்டும். வளையல்கள் அங்குள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அவர்கள் கர்ப்பமாகும்போது, பலரும் இங்கு வந்து சீமந்தம் செய்கின்றனர்.
அவர்களுக்குக் குழந்தை பிறந்த பின் பக்தர்கள் புடவை, வளையல்கள், பூஜடை, எலுமிச்சை பழம், பலதரப்பட்ட அரிசி மற்றும் பொங்கலை அம்மனுக்குப் படைக்கிறார்கள்.
புட்லூர் அங்காள பரமேஸ்வரி என்னும் பூங்காவனத்தம்மன் கோவில், சென்னை மாவட்டம், தமிழ்நாட்டில் உள்ளது.
காலை ஆறு மணி முதல் ஒரு மணி வரை மற்றும் இரண்டு மணி முதல் இரவு ஏழரை மணி வரை.
ஆண்டுத் திருவிழா ஆடி மாதத்தில் நடைபெறுகிறது.
சிறப்பு வாய்ந்த இருட்டு கும்பம் இச்சமயத்தில் நடைபெறுகிறது. இச்சமயத்தில் கோவில்களில் உள்ள அனைத்து விளக்குகளும் சிறிது நேரத்திற்கு அணைக்கப்பட்டு, கோவில் முழுவதும் இருட்டாக்கப்படுகிறது. மாசி மகம்,சிவராத்திரி மற்றும் ஆடி வெள்ளி விழாவும் இங்குக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில்
ராமாபுரம்
சென்னை மாவட்டம்
தமிழ்நாடு
அஞ்சல் குறியீடு 600 089.
சென்னையிலிருந்து 45 கிலோமீட்டர்.
அரக்கோணத்தில் இருந்து 38 கிலோமீட்டர்.
+91 94436 39825
Other languages: English
Please wait while the audio list loads..
Ganapathy
Shiva
Hanuman
Devi
Vishnu Sahasranama
Mahabharatam
Practical Wisdom
Yoga Vasishta
Vedas
Rituals
Rare Topics
Devi Mahatmyam
Glory of Venkatesha
Shani Mahatmya
Story of Sri Yantra
Rudram Explained
Atharva Sheersha
Sri Suktam
Kathopanishad
Ramayana
Mystique
Mantra Shastra
Bharat Matha
Bhagavatam
Astrology
Temples
Spiritual books
Purana Stories
Festivals
Sages and Saints