நட்சத்திர சிந்தாமணி : (முதல் பாகம்) அசுவினி முதல் பூரம் முடிய

nakshatra chintamani part 1 pdf

நட்சத்திர சிந்தாமணி : (இரண்டாம் பாகம்) உத்திரம் முதல் பூராடம் முடிய

நட்சத்திர சிந்தாமணி : (மூன்றாம் பாகம்) உத்திராடம் முதல் ரேவதி முடிய

 

Video - Nakshatra Suktam 

 

Nakshatra Suktam

 

 

 

பரணியில் நின்ற குருவை
1. சூரியன் பார்த்தால்: உண்மையானவன். சமூகத் தொண்டன், புகழும் அதிர்ஷ்டமும் உண்டு.
2. சந்திரன் பார்த்தால்: பெரியோரை மதிப்பவன். புகழ் உண்டு. நல்லவர்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்பவன். அமைதியை நாடுபவன். நல்ல காரியங்களையே செய்பவன்.
3.செவ்வாய் பார்த்தால்: கடின சித்தன். பணத்தை வீண் விரையமும், தேவையற்றவைக்கும் செலவு செய்பவன். ஆவான். துஷ்டர்களை அடக்குபவன். அரசு பதவியில் உள்ளவன். பலரையும் வேலை வாங்குபவன்.
4. புதன் பார்த்தால்: பொய்யன், கொடுஞ்சொல்லன், சண்டைக்காரன். ஒரே சமயத்தில் பல பெண்களை காதலிப்பவன். ஆடம்பர தோற்றம் உள்ளவன்.
5. சுக்கிரன் பார்த்தால்: ஸ்த்ரீ சுகம், படுக்கை சுகம், ஆடை ஆபரணம், வாகனம், வீடு வேலைக்காரர்கள் போன்ற வாழ்க்கையின் சுகபோகங்கள் எல்லாம் நிறைந்தவன்.
6. சனி பார்த்தால்: மனைவி, குழந்தைகளால் சுகமில்லாதவன், கடின சித்தன், பிறருக்கு பயனற்ற யோசனைகளைச் சொல்லுபவன்.
பரணியில் நின்ற சுக்கிரனை
1. சந்திரன் பார்த்தால்: சமூகத்தில் தலைமைப் பதவி வகிப்பவன். அந்த செல்வாக்கால் பல பெண்களுடன் ஈடுபட்டு கௌரவம் இழப்பவன்.
2. செவ்வாய் பார்த்தால்: ஏழை, பணமற்றவன், மதிப்புக் கிடையாது. வாழ்க்கையில் எப்பொழுதும் பறிகொடுத்தல் நிலை.
சுகமில்லை.
3. புதன் பார்த்தால்: வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்திப்பவன். வாழ்க்கையை தான் விரும்பியபடி சுகமாக அனுபவிக்க முடியாதவன்.
4. குரு பார்த்தால்: கவர்ச்சியான தோற்றமுள்ளவன். நல்ல அழகிய மனைவியும் குழந்தைகளும் உள்ளவன். வாழ்க்கையில் இவனுக்கு எல்லா சுகபோகங்களும் குறைவில்லாமல் ஏற்படும்.
5. சனிபார்த்தால்: அதிகம் சிறப்புப் பணம் உள்ளவன். அமைதியை விரும்புபவன். பிறரால் பாதிக்கப்படுபவன். ஏழை பங்காளன்.
பரணியில் நின்ற சனியை
1. சூரியன் பார்த்தால்: கால்நடை, பயிர்த்தொழில் இவற்றால் சம்பாதிப்பவன். நல்லகாரியங்களைச் செய்பவன்.
2. சந்திரன் பார்த்தால்: துஷ்டர்களையும், கெட்டவர் களையும் பின்பற்றுபவன். கடின சித்தன், ஏழை.
3. செவ்வாய் பார்த்தால் : தன்னை போஷிப்பவர் களையே தூஷிப்பவன். நடத்தைக்கேடும், சபல சித்தமும் உள்ளவன்.
4. புதன் பார்த்தால்: பொய்யன், திருடன், ஸ்த்ரீ சுகம் கிடையாது.
5. குரு பார்த்தால்: மிக உயர்ந்த பதவியும், அந்தஸ்தும் உள்ளவன். களத்திர ஸ்த்ரீ சுகமும் பணம், வாகனம் வீடு வேலைக்காரர்கள் ஆகிய சௌகரியங்கள் உள்ளவன்.
6. சுக்கிரன் பார்த்தால்; தன் உத்தியோக விஷயமாகப் பலவகைப் பயணங்கள் செய்பவன். தன் காம இச்சையை தனித்துக்கொள்ள மலடிகளை சுற்றித் திரிபவன். கவர்ச்சியற்ற கருமையான உடல் உள்ளவன்.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2023 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize