1. அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில்,
தக்கோலம்.
இக்கோயில் அரக்கோணத்தில் இருந்து 14 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து பூந்தமல்லி வழியாக 64 கி.மீ. தூரத்திலும், காஞ்சிபுரத்தில் இருந்து 27 கி.மீ. தூரத்திலும் உள்ளது. ரயில் பயணிகள் அரக்கோணத்தில் இறங்கி, அங்கிருந்து தக்கோலத்திற்கு பஸ்சில் செல்லலாம்.
தீண்டா திருமேனியான ஜலநாதீஸ்வரர் கோயில் தக்கோலத்தில் உள்ளது. இக்கோயிலில் அபூர்வ கோலத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இந்தத்தலம் ஒரு குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. தலை சாய்த்து உட்கார்ந்த நிலையில் இருக்கும் தட்சிணாமூர்த்தி பக்தர்களின் குறைகளை செவிசாய்த்து கேட்டு தீர்த்து வைக்கிறார்.
இக்கோயிலில் கோஷ்டத்தில் யோக தட்சிணாமூர்த்தி உத்குடி ஆசனத்தில் அமர்ந்து இருக்கிறார். இவர் கல்லால மரத்தின் கீழ், இடது காலை மடித்து பீடத்தில் இருத்திக்கொண்டு, வலது காலை கீழே தரையில் வைத்து உத்குடிக வீராசன நிலையில் அமர்ந்துள்ளார். ஒரு கையில் ருத்ராட்சமாலையும், மற்றொரு கையில் அக்னி ஜூவாலையும் உள்ளது. வலது கையில் சின் முத்திரை, இடது கையில் புத்தகம் வைத்துள்ளார்.
தலைக்கு மேல் கல்லால விருட்சம் உள்ளது. பிற இடங்களில் உள்ளது போல் இங்கு காலடியில் முனிவர்கள் இல்லை. கீழே காலடியில் நாகம், மான் உள்ளது. ஒரு காதில் மட்டும் குண்டலம் இருக்கிறது. இவர் தலையை இடதுபுறம் சாய்த்து வளைந்த பாவனையில் இருக்கிறார். இந்த அபூர்வ கோலத்தை வேறெங்கும் தரிசிக்க முடியாது. நிறம் மாறும் சிவலிங்கம்
இங்குள்ள மூலவர் ஜலநாதீஸ்வரர் உத்ராயன புண்ணிய காலத்தில் (தை முதல் ஆனி வரை) இளம் சிவப்பு நிறமாகவும், தட்சிணாயன காலத்தில் (ஆடி முதல் மார்கழி வரை) வெள்ளையாகவும் காணப்படுவார். இது போன்ற வித்தியாசமான
நிறம் மாறும் லிங்கம் அபூர்வம். இவர் மணல் லிங்கம் என்பதால் அபிஷேகம் கிடையாது. மஞ்சள் காப்புதான் சார்த்தப்படுகிறது. தீண்டாத்திருமேனி என பெயர் பெற்ற ஜலநாதீஸ்வரரை யாரும் தொட்டு பூஜை செய்வது கிடையாது. இதுவும் இந்தக் கோயிலின் ஒரு தனிச்சிறப்பு. சிவன் சன்னிதியில் இருந்து அபிஷேக தீர்த்தம் வெளியேறும் கோமுகம், பூதகணத்தின் முகமாக சிற்ப வேலைப்பாட்டுடன் உள்ளது.
வடக்கு சன்னதி அம்பாள்
வெளிப்பிரகாரத்தில் நின்ற நிலையில் காட்சி தரும் கிரிராஜ கன்னிகாம்பாளை தரிசித்து விட்டுத் தான் சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். அம்பாள் சன்னிதியின் அமைவிடமும் சிறப்பானதே. பவுர்ணமி, அஷ்டமியில் தரிசனம் செய்தால் சிறப்பான நலம் சேரும் எனப்படுகிறது.
சிவன் சன்னிதி கோஷ்டத்திலுள்ள துர்க்கை சாந்தமே வடிவமாக அருள் செய்கிறாள். இத்தலத்தை திருவூறல் என நாவுக்கரசரும், சுந்தரரும் பாடியுள்ளனர். இவ்வூரில் ஏழு சிவாலயங்கள், ஏழு விநாயகர் கோயில்கள், ஏழு கிராம தேவதை கோயில்கள் உள்ளன.
திருக்கோயில் தரிசன நேரம்
காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை
திருவிழா நாட்களில் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது. திருக்கோயில் தொலைபேசி எண் : 04172 - 252295 LOGOT 601 6560: vallimalaimurugar7@gmail.com

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |