திருக்கோயில்கள் வழிகாட்டி - நாமக்கல் மாவட்டம்

namakkal mavattam temples

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில்களின் புராணம், வரலாறு, பெருமைகள், திருவிழாக்கள், நேரங்கள் போன்றவற்றைப் பற்றிய புத்தகம் இது.

தலைப்புகள் - நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல்.  அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், திருச்செங்கோடு.  சக்தி விநாயகர் திருக்கோயில், நாமக்கல்  மாரியம்மன் செல்லாண்டியம்மன் திருக்கோயில், இராசிபுரம்.  வெங்கடாஜலபதி திருக்கோயில், செவ்வந்திப்பட்டி.  அசலதீபேஸ்வரர் திருக்கோயில், மோகனூர்.  பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில், ஒருவந்தூர்.  மாரியம்மன் திருக்கோயில், நாமகிரிப்பேட்டை.  அறப்பளீஸ்வரர் திருக்கோயில், கொல்லிமலை. வரதராஜப்பெருமாள் திருக்கோயில், நைனாமலை, சேந்தமங்கலம்.  பொன் வரதராஜப்பெருமாள் திருக்கோயில், இராசிபுரம்.

படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

 

 

Video - NAMAKKAL ANJANEYAR JAYANTHI ABISHEGAM 

 

NAMAKKAL ANJANEYAR JAYANTHI ABISHEGAM

 

 

 

அருள்மிகு கைலாசநாதர் கோயில்
திருச்செங்கோடு இறைவன் : அருள்மிகு கைலாசநாதர் இறைவி : அருள்மிகு நறுமண கூந்தலாம்பிகை தலவிருட்சம் : வன்னிமரம் ஆகமம் : காமீகம்
தலச்சிறப்பு
திருச்செங்கோடு நகரின் நடுவில் தேரோடும் வீதிகள் சூழ்ந்திருக்க உயர்ந்த இராசகோபுர வாயிலுடன் கிழக்கு நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது. நிலத்தம்பிரான் கோயில் என்றும் இதனை அழைப்பர். இக்கோயில் விக்கிரமத் தேவன் (விக்கிரம பாண்டியன் என்னும் மன்னனால் தோற்றுவிக்கப்பட்டது என்றும், இதனால் விக்கிரம பாண்டீச்சுரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் கைலாசநாதர் இலிங்கத்தின் திருமேனி தாங்கி எழுந்தருளியுள்ளார். இடப்புறம் நறுமண கூந்தலாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது . இத்திருக்கோயிலில் சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. நடைதிறக்கும் நேரம் காலை 6.00 மணிமுதல் - பகல் 12.00 மணி வரை மாலை 4.00 மணிமுதல் - இரவு 8.00 மணி வரை
அன்னதானத் திட்டம்
இத்திருக்கோயிலில் மாண்புமிகு தமிழக முதல்வரின் திட்டத்தின்படி தினந்தோறும் 60 நபர்களுக்கு
அன்னதானத் அன்னதானம் வழங்கப்படுகிறது.
அமைவிடம்
30கி.மீ.
இத்திருக்கோயில் நாமக்கல்லில் இருந்து மேற்கிலும், சேலத்திலிருந்து 45 கி.மீ தெற்கிலும் உள்ள திருச்செங்கோடு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. சங்ககிரி இரயில் நிலையத்திலிருந்து 10கி.மீ. தொலைவிலும் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
திருச்செங்கோடு தல பாடல்
வெந்தவெண் ணீறணிந்து விரிநூ றிகழ்மார்பி னல்ல பந்தன வும்விரலா ளொருமாக மமர்ந்தருளிக் கொந்தன வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற அந்தண னைத்தொழுவா ரவலம் அறுப்பாறே.
- திருஞானசம்பந்தர்
அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர் உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெனைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்
திருஞானசம்பந்தர்
அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில்
- நாமக்கல்
இறைவன் : அருள்மிகு சக்தி விநாயகர் -
தலச்சிறப்பு
பக்தர்களை காக்கும் கடவுளாக எடுத்த காரியம் இனிதே நிறைவேற அருள்பாலிக்கும் கடவுளாகவும் அருள்மிகு சக்தி விநாயகர் விளங்குகிறார். வடக்கு முகமாக அமைந்து அருள்பாலித்து வருகிறார். சுமார் 100 ஆண்டுகள் தொன்மையும், பழமையும் பெற்ற சிறப்பு திருக்கோயிலாகும்..
நாமக்கல் பகுதி மக்கள் தங்களுடைய எந்தவொரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், விநாயகரை வழிபட்ட பின்னரே செய்கின்றார்கள். வியாபார பெருமக்கள் தங்களது கடை சாவிகளை விநாயகர் திருவடியில் வைத்து, எடுத்து சென்று வியாபாரத்தைத் தொடங்குவார்கள்.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2023 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize