தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களின் புராணம், வரலாறு, பெருமைகள், திருவிழாக்கள், நேரங்கள் போன்றவற்றைப் பற்றிய புத்தகம் இது.
தலைப்புகள் -
சாலைவிநாயகர் திருக்கோயில், தருமபுரி நகர்.
பரவாசுதேவ சுவாமி திருக்கோயில், கோட்டை, தருமபுரி
மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயில், கோட்டை, தருமபுரி
சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமிப்பேட்டை, தருமபுரி
காலபைரவர் சுவாமி திருக்கோயில், அதியமான்கோட்டை.
சென்றாய சுவாமி திருக்கோயில், அதியமான்கோட்டை.
சோமேஸ்வரர் சுவாமி திருக்கோயில், அதியமான்கோட்டை.
ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், வே.முத்தம்பட்டி.
ஆருணேஸ்வரர் சுவாமி திருக்கோயில், காரிமங்கலம்.
தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தமலை.
ஹரிஹரநாத சுவாமி திருக்கோயில், தருமபுரி நகர்.
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், அளேபுரம்.
தேசநாதேஸ்வரர் திருக்கோயில், ஒகேனக்கல்.
முத்தித்தராய சுவாமி மற்றும் திம்மராய சுவாமி திருக்கோயில், நெருப்பூர்.
வெங்கடரமண சுவாமி திருக்கோயில், மணியம்பாடி.
அருள்மிகு சாலைவிநாயகர் திருக்கோயில்
தருமபுரி நகர். ( இறைவன் : அருள்மிகு சாலைவிநாயகர் ) தலச்சிறப்பு
இத்திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோயிலாகும். மிகவும் பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலின் வழியே செல்லும் பயணிகள் அனைவரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி வாகனபூஜை செய்த பின்னரே பயணத்தைத் தொடருவர். அதேபோல் இப்பகுதி மக்கள் எந்த வாகனத்தை வாங்கினாலும் முதன் முதலில் இத்திருக்கோயிலுக்கு வந்து பூஜை செய்து செல்கின்றனர். புதிய திருமணத் தம்பதிகள் முதன் முதலில் இத்திருக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். அதேபோல் குழந்தை பிறந்த 15 நாட்கள் ஆன பிறகு, குழந்தையுடன் இத்திருக்கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்து செல்கின்றனர்.
திருவிழாக்கள்
நவராத்திரி உற்சவம், மார்கழி மாத விடியற்காலை பூஜை மற்றும் விநாயகர்சதுர்த்தி உற்சவம் முதலியன சிறப்பாக நடைபெறுகின்றன. விநாயகர்சதுர்த்தி திருவிழா 15 நாட்கள் மிக விமரிசையாக நடைபெறுகிறது. பூஜை மற்றும் நடைதிறந்திருக்கும் நேரம் காலசந்தி மற்றும் சாயரட்சை என தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது
காலை 6.00 மணிமுதல் - பகல் 12.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் - இரவு 8.00 மணிவரை அமைவிடம்
இத்திருக்கோயில் தருமபுரியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தருமபுரி - சேலம் செல்லும் சாலையில் (பழைய சாலை) பழைய காவல் நிலையம் எதிரில் உள்ளது. தருமபுரி பேருந்து நிலையத்திருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. திருக்கோயிலுக்கு ஆட்டோ வசதி உள்ளது. தருமபுரி நகரில் தங்கும் வசதி உள்ளது.
அருள்மிகு பரவாசுதேவ சுவாமி திருக்கோயில் கோட்டை, தருமபுரி.
இறைவன் : அருள்மிகு பரவாசுதேவ சுவாமி : அருள்தரும் வரமகாலட்சுமி தாயார் : சனத்குமார நதி
தலவிருட்சம் : ஆச்சா மரம் : வைகானஸம்
ஆகமம்
இறைவி
தீர்த்தம்
புராணச்சிறப்பு
இத்திருக்கோயில் தருமபுரி நகர், கோட்டை, அருள்தரும் கல்யாண காமாட்சியம்மன் மற்றும் அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயிலுக்கு வலப்புறம் அமைந்து ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் பழமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலானது பிரம்மாவினால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், தேவர்கள், முனிவர்கள் மற்றும் பஞ்சபாண்டவர்களில் அர்ச்சுணன் முதலியோரால் வழிபட்டதாகவும் வரலாறு உள்ளது.
தலச்சிறப்பு
திருவரங்கத்திலே அரங்கநாதன் சயனத் திருக்கோலத்திலும் திருமலையிலே ஸ்ரீனிவாசப்பெருமாள் நின்ற திருக்கோலத்திலும் காட்சியளிக்கின்றனர். புண்ணிய பூமியான தகடூரிலே பரவாசுதேவ பெருமாள் அமர்ந்தத் திருக்கோலத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தனிச்சிறப்பு
“சென்றால் குடையாய் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீளகடவுள் - என்றும் புணையாம் மணி விளக்காம் பூம்பட்டாம் புல்கும் அணையாம் திருமாலுக்கு அரவு” என்ற பொய்கையாழ்வரின் அருள்வாக்குப்படி இங்கு ஆதிசேஷன் ஏழு தலைகளுடன் குடையாகப் படமெடுத்த நிலையில் தனது நீண்ட உடலை மூன்று சுற்றுகளாக்கிக் கொண்டு சர்ப்பாசனமாக திகழும் நிலையில், அன்னையை இடது தொடையில் அமர்த்தியபடி பரவாசுதேவப்பெருமாள்,
Astrology
Atharva Sheersha
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rituals
Rudram Explained
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta