சிவ புராணத்தின் மாஹாத்ம்யம்

சிவ புராணம் என்பது முன்னொரு காலத்தில் சிவபெருமானே சனத்குமாரருக்கு உபதேசம் செய்ததாகும்.

கலியுகத்தில் மனிதர்கள் நன்மை அடைவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

இந்த கலியுகத்தில் மனிதர்கள் ஏறக்குறைய அசுரர்களைப் போலவே நடந்துகொள்வார்கள்.

அவர்கள் உள்ளே தெய்வத்தன்மையை ஏற்படுவதற்காக உருவாகியது இந்த சிவபுராணம்.

ஞானம், வைராக்கியம், பக்தி இவற்றால் புத்தியை நிரப்பக் கூடியது இந்த சிவபுராணம்.

காலம் என்கின்ற பெரும் பாம்பிலிருந்து மனிதர்களுக்கு முக்தியைத் தருவதற்காக உருவாக்கப்பட்டது இந்த சிவபுராணம்.

மனிதனின் மனதிலிருந்து காமத்தையும் கோவத்தையும் அழித்து விவேகத்தைத் தரக்கூடியது இந்த சிவபுராணம்.

அனைத்து புராணங்களை விட மங்களகரமானதும் கல்யாணகரமனதும் இந்த சிவபுராணம்.

படிப்பவர்களுக்குச் சிவனின் அருகாமையைப் பலனாகக் கொடுக்கக் கூடியது இந்த சிவபுராணம்.

அந்த சிவபெருமானே தான் சிவபுராணமாக இம்மண்ணில் தோன்றியுள்ளார்.

அந்தப் பரம்பொருள் சிவபெருமானை நம்மால் கண்ணால் காண முடியாது. ஆகையால் தான் அவர் வாக்கு வடிவமாகச் சிவபுராணத்தில் தோன்றியுள்ளார்.

இந்த சிவபுராணத்தைப் பாராயணம்(திரும்பத்திரும்பச் சொல்வதால்) செய்து அந்த சிவபெருமானை உணர முடியும்.

அவரின் அருளையும் சுலபமாகப் பெற முடியும்.

சிவனே தான் இந்த சிவபுராணம். அதைக் கூறுபவரும் கேட்பவரும் சிவஸ்வரூபம் தான்.

இந்த புராணத்தில் உள்ள கதைகளைக் கேட்டால் யாகங்களைச் செய்த பலன் கிடைக்கும்.

இந்த சிவ புராணத்தின் பொருள் கூறுபவருக்கு எல்லா புனித நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும்.

சிவனுடைய அருகாமையும் கிடைக்கும்.

சிவ புராணத்தைத் தொழுபவர்கள் - புண்ணியம் செய்தவர்கள்.

அவர்களைப் பாவங்கள் அணுகாது.

இதைப் படிப்பதற்கு முன் செய்த பாவங்களும், படித்த பிறகு தானாகவே நீங்கிவிடும்.

சிவபுராணத்தின் பாராயணம் எங்கெல்லாம் நடக்கிறதோ அந்த இடம் பூமியில் உள்ள கைலாசம் ஆகிறது.

அங்கு வருகின்ற சிவபக்தர்களுக்கு, சிவன் கோவில்களை எல்லாம் தரிசித்த பலன் கிடைக்கிறது.

சிவபுராண பாராயணம் நடக்கின்ற இடங்களுக்கு ‘மகேஷ்வரதாமம், என்று பெயர்.

பூமி அழியும் வரை அவ்விடங்களில் சிவபெருமானின் சாந்நித்தியம் கட்டாயமாக இருக்கும்.

நான்கு விதமான புருஷார்த்தங்களையும் கொடுக்கக் கூடியது சிவபுராணம்.

மூன்று தாபங்களையும் அழிக்கக்கூடியது சிவபுராணம்.

இவ்வுலகிலும் அவ்வுலகிலும் சுகம் தரக்கூடியது சிவபுராணம்.

சிவ அருகாமையைத் தரக்கூடியது இந்த சிவபுராணம்.

அனைவரும் சிவபுராணத்தைத் தினமும் கேட்கவேண்டும் அல்லது பாராயணம் செய்ய வேண்டும்.

தமிழ்

தமிழ்

சிவன்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...

We use cookies