Sitarama Homa on Vivaha Panchami - 6, December

Vivaha panchami is the day Lord Rama and Sita devi got married. Pray for happy married life by participating in this Homa.

Click here to participate

அவிட்டம் நட்சத்திரம்

Dhanishta Nakshatra symbol drum

மகர ராசியின் 23 டிகிரி 20 நிமிடங்களிலிருந்து 6 டிகிரி 40 நிமிடங்கள் வரை பரவியிருக்கும் நட்சத்திரம் அவிட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இது வேத வானவியலில் 23வது நட்சத்திரம் ஆகும்.

நவீன வானியல் அவிட்டம் α Sualocin  மற்றும் Delphini ஆகியவற்றை ஒத்துள்ளது.

 

பண்புகள்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்: 

இரண்டு ராசிக்கும் பொதுவானது

  • செல்வந்தர்
  • தொண்டு செய்பவர்
  • முரட்டுத்தனமானவர்
  • பேராசை உள்ளவர்
  • கூர்மையான அறிவுள்ளவர்
  • உயர்ந்த குறிக்கோளுடையவர்
  • ஆரோக்கியத்தை புறக்கணிப்பவர்
  • பணம் சம்பாதிப்பது தான் வாழ்க்கையில் முன்னுரிமை என்று சிந்திப்பவர்
  • சுயாதீன மனநிலை உள்ளவர்
  • வேலையில் திறமையானவர்
  • ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவர்
  • சுயநலவாதி
  • விசுவாசமில்லாதவர்
  • தன்னம்பிக்கை உள்ளவர்
  • ரகசியம் காக்கும் திறன் உள்ளவர்
  • குடும்பத்துடன் இருப்பவர்
  • பழிவாங்கும் நோக்கம் உடையவர்
  • திடமானவர்

அவிட்டம் நட்சத்திரம் மகர ராசிக்கு மட்டும்

  • எச்சரிக்கையானவர்
  • சுருசுருப்பானவர்
  • சாகசக்காரர்
  • செல்வாக்கு உள்ளவர்

அவிட்டம் நட்சத்திரம் கும்ப ராசிக்கு மட்டும்

  • சமூக நேசமுள்ளவர்
  • விரைவில் புரிந்துகொள்ளும் அறிவுள்ளவர்
  • அடுத்தவர்கள் விஷயத்தில் ஆர்வமுள்ளவர்
  • குறுகிய மனப்பான்மை உள்ளவர்

 

மந்திரம்

ஓம் வசுப்யோ நம:

 

சாதகமற்ற நட்சத்திரங்கள்

  • பூரட்டாதி
  • இரேவதி
  • பரணி
  • அவிட்டம் நட்சத்திரம் மகர ராசி - மகம், பூரம் , உத்திரம் சிம்ம ராசி
  • அவிட்டம் நட்சத்திரம் கும்ப ராசி - உத்திரம் கன்னி ராசி , ஹஸ்தம் , சித்திரை கன்னி ராசி

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த நாட்களில் முக்கியமான நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் மற்றும் இந்த நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுடன் கூட்டுறவைத் தவிர்க்க வேண்டும்.

 

உடல்நலப் பிரச்சினைகள்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்: 

அவிட்டம் நட்சத்திரம் மகர ராசி

  • கால் காயம்
  • கொப்பளங்கள்
  • விக்கல்
  • குமட்டல்

அவிட்டம் நட்சத்திரம் கும்ப ராசி

  • கால் காயம்
  • இரத்தக் கோளாறுகள்
  • படபடப்பு
  • மயக்கம்
  • இதய நோய்கள்
  • குருதி அழுத்தம்
  • சுருல்சிரை

 

பொருத்தமான தொழில்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொருத்தமான தொழில்களில் சில:

அவிட்டம் நட்சத்திரம் மகர ராசி

  • வைத்தியர்
  • சுரங்கத் தொழில்
  • புவியியல்
  • பொறியாளர்
  • தொழிலாளர் துறை (Labour Department)
  • புனர் வாழ்வு (Rehbilation)
  • சிறை அதிகாரி
  • தயாரிப்புத் துறை
  • உபகரணங்கள் தயாரிப்பு
  • வாகன உதிரி பாகங்கள் (Spare Parts)
  • சிமெண்ட் விற்பணை
  • கனிமங்கள்
  • கண்ணாடி
  • மது
  • சணல்

அவிட்டம் நட்சத்திரம் கும்ப ராசி

  • தொலைக்காட்சி
  • தொலைப்பேசி
  • மின்சாரம்
  • அணு அறிவியல்
  • ஆய்வு
  • விரைதூதர் சேவை
  • அச்சிடுதல்
  • விசாரணை
  • விவசாயம்
  • பட்டு
  • சணல் தொழில்
  • சுரங்கத் தொழில்
  • இரும்பு
  • தோல் தொழில்
  • காவல் துறை
  • பாதுகாப்பு சேவை
  • மீட்புத்துறை

 

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வைரம் அணியலாமா?

அணியலாம் 

அதிர்ஷ்டக் கல்

பவழம்

சாதகமான நிறங்கள்

சிவப்பு, கருப்பு, அடர்நீலம்.

 

அவிட்டம் நட்சத்திரத்திற்கான பெயர்கள்

 

அவிட்டம் நட்சத்திரத்திற்கான அவகஹடாதி அமைப்பின்படி பெயரின் தொடக்க எழுத்து:  

  • முதல் சரணம் – கா³
  • இரண்டாவது சரணம் - கீ³
  • மூன்றாவது சரணம் – கூ³
  • நான்காவது சரணம் – கே³

இந்த எழுத்துக்களைப் பெயரிடும் விழாவின் போது வைக்கப்படும் பாரம்பரிய நட்சத்திரப் பெயருக்கு பயன்படுத்தலாம். 

சில சமூகங்களில், பெயர் சூட்டும் விழாவின் போது தாத்தா பாட்டியின் பெயர்கள் வைக்கப்படுகின்றன.அந்த முறையைப் பின்பற்றுவதில் எந்தத் தீங்கும் இல்லை.

பதிவுகள் மற்றும் அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காக வைக்கப்படும் அதிகாரப்பூர்வ பெயர் இதிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. அதற்கு வ்யவஹாரிக நாமம் என்று பெயர். மேற்கண்ட அமைப்பின்படி நக்ஷத்ரப் பெயர், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிகாரப்பூர்வ பெயரில் நீங்கள் தவிர்க்க வேண்டிய எழுத்துக்கள் - 

  • அவிட்டம் நட்சத்திரம் கும்ப ராசி - ஸ, ஓ, ஔ, ட, ட², ட³, ட⁴
  • அவிட்டம் நட்சத்திரம் கும்ப ராசி - ஏ, ஐ, ஹ, அம், க்ஷ, த, த², த³, த⁴, ந

 

திருமணம்

திரமணவாழ்க்கை வளமாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

பரிகாரங்கள்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புத, குரு, சுக்கிர காலங்கள் பொதுவாகச் சாதகமற்றவை. 

அவர்கள் பின்வரும் பரிகாரங்களைச் செய்யலாம் -

 

அவிட்டம் நட்சத்திரம் 

  • இறைவன் – வசு
  • ஆளும் கிரகம் – செவ்வாய்
  • விலங்கு - மனிதன்
  • மரம் – வன்னி
  • பறவை – மயில்
  • பூதம் – ஆகாசம்
  • கனம் – அஸுரகனம்
  • யோனி - சிங்கம் (பெண்)
  • நாடி – மத்தியநாடி
  • சின்னம் – முரசு
78.0K
11.7K

Comments

Security Code
39222
finger point down
சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

மிகவும் பயனுள்ள இணையதளம் 😊 -ஆதி

வேததாராவினால் கிடைத்த நேர்மறை மற்றும் வளர்ச்சிக்கு நன்றி. 🙏🏻 -Shankar

ரொம்ப அருமையான இணையதளம் நன்றிகள் -User_slqju9

அறிவு வளர்க்கும் தரமான இணையதளம் -மாதவி வெங்கடேஷ்

Read more comments

Knowledge Bank

ராஜசூய யாகம் மற்றும் வாஜபேய​ யாகம்

ஒரு க்ஷத்திரியன் ராஜசூய யாகத்தைச் செய்து அரசராகிறார், மற்றும் ஒரு அரசர் வாஜபேய​ யாகத்தைச் செய்து சக்கரவர்த்தியாகிறார்.

இராமாயணத்தில் கைகேயியின் செயல்களை நியாயப்படுத்துவது

இராமரின் வனவாசம் குறித்து கைகேயி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் வெளிவருவதற்கு முக்கியமானது. இராவணனால் துன்புறுத்தப்பட்ட தேவர்களின் பிரார்த்தனைக்கு பதிலளிக்கும் விதமாக பகவான் நாராயணன் ‌இராமனாக அவதாரம் எடுத்தார். கைகேயி இராமன் வனவாசத்தை வலியுறுத்தாமல் இருந்திருந்தால், சீதை கடத்தல் உள்ளிட்ட தொடர் நிகழ்வுகள் நிகழ்ந்திருக்காது. சீதையை கடத்தாமல் இராவணனின் தோல்வி ஏற்பட்டிருக்காது. இவ்வாறு, கைகேயியின் செயல்கள் தெய்வீகத் திட்டத்திற்கு உறுதுணையாக இருந்தன.

Quiz

பிரம்மஸூத்திரம் எந்த கிளையின் ஒரு புத்தகம்?
தமிழ்

தமிழ்

ஜோதிடம்

Click on any topic to open

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...