Keesu Keesendru

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ

தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்.

95.5K

Comments

jftdm

பெண் ரிஷி எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

பெண் ரிஷி ரிஷிகா என்று அழைக்கப்பட்டனர்.

பிரம்மவாதினி மற்றும் ரிஷிகா இருவரும் ஒன்றா?

பிரம்மவாதி என்பவர் வேதத்தின் முழு பொருளும் பற்றிப் பேசக் கூடியவர் ஆவார். பிரம்மவாதினி பெண் அறிஞர் ஆவார். இவர்கள் பிரம்மவாதியின் பெண்பால் ஆகும். ரிஷி என்பவர் மந்திரங்களை உபதேசிப்பவர் ஆவார். ரிஷிகா என்பவர் மந்திரங்களை உபதேசிக்கும் பெண்கள் ஆவார். அனைத்து ரிஷிகாகளும் பிரம்மவாதினி ஆவார்கள், ஆனால் பிரம்ம வாதினி அனைவரும் ரிஷிகா அல்ல.

Quiz

எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |