Aazhi Mazhai Kanna

Raagam - Varali, Thalam - Aadi, Composer - Aandaal, Singer - Dileep Balakrishnan.

ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொடார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

91.6K

Comments

ncys6

ஸ்ரீமத் பாகவதத்தின் ஆசிரியர் யார்?

மகாமுனி வியாஸர் ஸ்ரீமத் பாகவதத்தின் ஆசிரியர் ஆவார். அவர் வேதவியாஸர் என்றும் அழைக்கப்படுவார்.

ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன?

ரிஷி என்பவர் முழு ஞானம் அடைந்தவர் ஆவார். அவரின் ஞானத்தின் வெளிப்பாடே மந்திரங்கள் ஆகும். முனிவர் என்பவர் ஞானம், புத்திக்கூர்மை மற்றும் நிலையான புத்தி உள்ளவர் ஆவார். முனிவர்களும் தாம் கூறும் கூற்றில் நிதானம் உள்ளவர்கள் ஆவார்.

Quiz

ராமாவதாரத்துடன் சம்பந்தப்பட்ட கிரகம் எது?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |