Special - Hanuman Homa - 16, October

Praying to Lord Hanuman grants strength, courage, protection, and spiritual guidance for a fulfilled life.

Click here to participate

ஆயர்பாடி மாளிகையில்

108.8K
16.3K

Comments

Security Code
51835
finger point down
மிகவும் நல்ல இணையதளம் 👍 -தினேஷ்

அழகான வலைத்தளம் 🌺 -அனந்தன்

அறிவினை வழங்கும் வெப்ஸைட் -அபிராமி

வேததாராவின் தாக்கம் மாற்றம் கொண்டது. என் வாழ்க்கையில் நேர்மறைக்காக மனமார்ந்த நன்றி. 🙏🏻 -Harini

பயன்படுத்த ஏற்ற இணையதளம் -லலிதா

Read more comments

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியதில்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ 

அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ 

அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

அவன் பொன்னழகை காண்பதர்க்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

Knowledge Bank

முருகனின் சடாட்சர மந்திரம்

1. ௐ வசத்³பு⁴வே நம꞉ 2. ஶரவணப⁴வ

ஹிரண்யகசிபுவின் சகோதரி யார்?

ஹோலிகா

Quiz

பாண்டவர்களின் வனவாசத்தின்போது அவர்களது ஆசிரமத்தில் தனது சீடருடன் அதிதியாக வந்த பொழுது, அவர்களுக்கு கொடுப்பதற்கு உணவு இருக்கவில்லை. அந்த ரிஷி யார்?
Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon