இஷ்வாகு வம்சத்தில் துரியோதனன் என்ற ஒரு ராஜா இருந்தார். மகாபாரதத்தில் வரும் துரியோதனன் அல்ல. இவர் ராமரின் வம்சத்தில் உள்ளவர். இந்திரனுக்கு சமமான பலம் உள்ள துரியோதனன் ஒருபொழுதும் யுத்தத்தில் இருந்து பின் வாங்க மாட்டான். அவ....
இஷ்வாகு வம்சத்தில் துரியோதனன் என்ற ஒரு ராஜா இருந்தார். மகாபாரதத்தில் வரும் துரியோதனன் அல்ல. இவர் ராமரின் வம்சத்தில் உள்ளவர். இந்திரனுக்கு சமமான பலம் உள்ள துரியோதனன் ஒருபொழுதும் யுத்தத்தில் இருந்து பின் வாங்க மாட்டான். அவருடைய ராஜ்யத்தின் பெயர் மாகிஷ்மதி. அவருடைய ராஜ்யத்தில் தேவையான அளவில் மழை பெய்யும். அதிகமாகவும் பொழியாது குறைவாகவும் பொழியாது. அவருடைய ராஜ்யத்தில் தேவையான ரத்தினம் தனம் தானியம் பசு இவை அனைத்தும் தேவையான அளவு பரிபூரணமாக இருந்தன. யாரும் தரித்திரமாகவோ நோயாளிகளாகவும் இருக்கவில்லை. துரியோதனன் வேத சாஸ்திரங்களில் மிகப் பெரிய வித்வானாக இருந்தார். பெரும் வள்ளலாகவும் இருந்தான். மிகவும் சாந்தமாகவும் யாரையும் புண்படுத்தாத வனாகவும் இருந்தான். தேவ நதி நர்மதா அவரின் மனைவி ஆவார். அவர்களுக்கு சூப்பர் சனா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. சாக்ஷாத் அக்னிதேவன் சுதர்சன மீது ஆசை பட்டார். அவர் பிராமண வேடத்தில் பெண் கேட்டு வந்தார். ராஜா நினைத்தார் அவன் பார்ப்பதற்கு தரித்திரன் ஆக இருந்ததாலும், அவர் ஷத்ரியனாக இல்லாததாலும அரசன் வேண்டாம் என்று விட்டு விட்டார். கோபத்தில் ராஜா ஏற்படுத்திய யாகத்திலிருந்து மறைந்துவிட்டார். அரசன் அங்குள்ள நான் ஞானிகளிடம் ஆலோசனை செய்தான். அவர்களின் ஆலோசனைப்படி அனைவரும் அக்னி தேவனை பிரார்த்தனை செய்தனர். அப்பொழுது அக்னி தேவன் ஆயிரம் சூரிய பிரகாசத்துடன் இரவு நேரத்தில் வெளிப்பட்டார்ராஜாவின் மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி அவர்களிடம் கூறினார் அக்னிதேவன். விஷயத்தை அனைவரும் ராஜாவிடம் சென்று கூறினர். ராஜாவும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார்.அவர்களுடைய ராஜ்யத்தில் எப்போதும் நந்திதேவர் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ராஜா.அக்னி பகவானும் சரி என்று கூறி சுதர்சன்யை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்து வந்தார். அக்னிக்கும் சுதர்சனை க்கும் ஒரு புத்திரன் பிறந்தான் அவன் தான் சுதர்சனன். சிறு வயதிலேயே சுதர்சனுக்கு பிரம்ம ஞானம் கிடைத்தது. ஓக்கவான் என்ற ஒரு ராஜா அப்போது பூமியில் வாழ்ந்து கொண்டிருந்தான். அவருக்கு ஒகவதி என்ற மகளும் ஒகரதன் என்ற மகனும் இருந்தான். ஒகவதியை சுதர்சனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.அவர்கள் இருவரும் இல்லற தர்மத்தை கடைப்பிடித்து குருஷேத்திரத்தில் வாழ்ந்து வந்தனர். ஓ*** பதிக்கு சுதர்சனன் ஒரு உபதேசம் செய்தார் அதன்படி அதிதிகளுக்கு எப்போதும் அவர்கள் விருப்பம் போல நடக்க வேண்டும் என்று. ஒருநாள் சுதர்சனன் யாகங்களுக்கு வேண்டிய பொருட்களை சேகரிப்பதற்காக காட்டிற்கு சென்றான். அப்பொழுது எமதர்மன் அதிதி வேடத்தில் அவர்கள் இல்லத்திற்கு வந்தார். போகவதி விதிப்படி அவரை பூஜித்து தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள். அதற்கு எமதர்மன் அவளின் உயிரை தானமாக கேட்டார். கணவரின் கட்டளைக்கு ஏற்ப அவள் அதற்கு ஒப்புக் கொண்டாள். அப்பொழுது சுதர்சனன் திரும்பி வந்து ஓகவதி என்று கூப்பிட்டார். ஓகவதி பதிலளிக்கவில்லை மரணம் அவர்களின் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருப்பதை கண்டான். பூமி நிலம் நீர் ஆகாயம் வாயு புத்தி ஆத்மா மனசு காலம் திக்குகள் இவை அனைத்தும் எல்லாம் திக்குகளிலும் இருந்து கொண்டு நாம் செய்யும் பாவ புண்ணியத்தின் கணக்குகளை போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என்பது உண்மையானால் தேவர்கள் ஒகவதியை பாதுகாக்கட்டும் எங்களை காப்பாற்றட்டும் என்று கூறினான், அல்லாவிடில் என்னை எரித்து சாம்பல் ஆகட்டும் என்றான். அப்பொழுது எல்லா திசைகளிலும் இருந்து உண்மை என்று சத்தம் வரத் தொடங்கியது.அப்போது உள்ளே இருந்த எமதர்மன் தன்னுடைய சுய உருவம் எடுத்து சுதர்சனருக்கு காட்சி அளித்தார். அவர் கூறினார் சுதர்சனை போல நல்ல உள்ளம் உள்ளவன் இல்லை என்றும் எல்லா நலனும் கிடைக்கும் என்றும் கூறினார். நீ மரணத்தை ஜெயித்துவிட்டால் உன் மனைவி மிகச் சிறந்த பதிவிரதை, உன் வாக்கை மீறி அவள் செல்ல மாட்டாள்,இனி அவளின்ஒரு பாதி புண்ணிய நதியாக ஓடிக் கொண்டிருக்கும் மறுபாதி உன்னுடன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருப்பாள் என்று கூறினார். அவளுக்கு உன் மீது உள்ள நம்பிக்கையாலும் ஆதரவாலும் அவள் செய்யும் சேவையாகும் தான் அவளுக்கு இந்தப் புண்ணிய பதவி கிடைத்தது. இனிமேல் உனக்கு இந்த பூமியில் மறு ஜென்மம் கிடையாது இம்மாதிரியாக அந்த தம்பதியர்களுக்கு யமதர்மராஜர் ஆசீர்வாதம் செய்தார். இங்கு எமதர்மராஜன் செய்தது ஒரு பரீட்சையாகும். அது ஒரு பதிவிரதை என்பவர் நெருக்கடியான நேரத்திலும் தனது கணவரின் வாக்கின் மீதும் அவரின் சத்தியத்தின் மீதும் எவ்வளவு நம்பிக்கை உள்ளது என்று அறிய ஒரு பரீட்சையாகும். அந்த நம்பிக்கையே தனக்கு பாதுகாப்பாக வரும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் ஒரு மனைவிக்கு. இல்லறத்தில் இருப்பவர்களுக்கு அதிதியை விட அதாவது விருந்தினரை விட ஒரு தேவதை இல்லை. நூறு யாகம் செய்ததன் பலமாகும் ஒரு அதிதியின் பூஜை. வீட்டிற்கு வரும் அதிதியை சரியாக கவனிக்காவிடில், அவ்வீட்டில் உள்ள புண்ணியத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய பாவத்தை விட்டு சென்று விடுவார் விருந்தினர். விருந்தோம்பல் ஒருவனுக்கு தனம் ஆயுள் புகழ் இவை அனைத்தும் கொடுக்கும். எல்லாக் தீய சக்திகளையும் அழிக்கும். ஆகையால் நாம் எப்பொழுதும் விருந்தோம்பல் செய்ய வேண்டும்.
Please wait while the audio list loads..
Ganapathy
Shiva
Hanuman
Devi
Vishnu Sahasranama
Mahabharatam
Practical Wisdom
Yoga Vasishta
Vedas
Rituals
Rare Topics
Devi Mahatmyam
Glory of Venkatesha
Shani Mahatmya
Story of Sri Yantra
Rudram Explained
Atharva Sheersha
Sri Suktam
Kathopanishad
Ramayana
Mystique
Mantra Shastra
Bharat Matha
Bhagavatam
Astrology
Temples
Spiritual books
Purana Stories
Festivals
Sages and Saints