வைகுண்டநாதர் கோவில் ஸ்ரீவைகுண்டம்

 

நவ திருப்பதியில் முதலாவதாக உள்ள ஸ்தலம் வைகுண்டநாதர் திருக்கோயில்.

ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோவில் சூரியனுக்கு உரிய ஸ் தலமாகும்.

பெருமாளின் வடிவம்

இங்கு பெருமாள்  சந்திர விமானத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சி தருகிறார். 

கையில் தண்டம் இருக்கிறது. தலைக்கு மேல் ஆதிசேஷன் குடையாக இருக்கிறார்.  

சித்திரை மற்றும் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று காலையில் சூரிய ஒளி வைகுண்டநாதர் பாதத்தில் விழும்.

ஸ்ரீவைகுண்டதில் உள்ள தாயார்

வைகுண்ட நாயகி, சோரநாத நாயகி.

பெருமாளுக்கு கள்ளபிரான் என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது?

வைகுண்ட நாதரின் பக்தனான காலதூஷகன் என்று திருடன், தான் திருடியதில் பாதி கோயில் சேவைக்கும், 

மீதியை தான தர்மங்களும் செய்து வந்தான். 

ஒருநாள் மணப்படை என்ற இடத்திலிருந்து அரண்மனை பொருட்களைத் திருடிச் சென்ற போது அவனுடன் சென்றவர்கள் சிக்கிக்கொண்டனர். 

காலதூஷகனை தேடிச் சென்ற காவலர்கள் அரண்மனைக்குச் சென்றனர். 

அவ்வேளையில் பெருமாளே திருடனாக மன்னர் முன் தோன்றி, மன்னரின் ஆட்சி சரியில்லாத  காரணத்தினால் தான், 

பொருள் தேவைக்காகத் தான் திருடியதாகத் தைரியமாகக் கூறியதைக் கண்டு, 

வந்திருப்பது யார் என்று கேட்டார். 

அப்போது பெருமாள் தன் சுயரூபம் காட்டி அருளினார். மன்னன் மன்னிப்பு கேட்டான். 

திருடன் வடிவில் வந்தாலும், பக்தர்களின் உள்ளம் கவரும் அழகுடன் இருப்பதாலும் சுவாமிக்கு கள்ளபிரான் என்ற பெயர் ஏற்பட்டது.

108 போர்வை அலங்காரம்

தை முதல் நாளில் கள்ளபிரானுக்கு 108 உடைகள் அணிவித்து பூஜிப்பார்கள். 

பின் அவர் கொடிமரத்தை சுற்றி வருவார். 

அதன்பின் ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தைக் கலப்பார்கள். 

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்வியதேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும் இந்நாளில் கள்ளபிரான் வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

மணவாளப்பெருமான் நம்மாழ்வாரின் பாசுரத்திற்கு விளக்கமளிக்கிறார்

புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுண்டத்தில் நின்று, 

என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்ததை மணவாள பெருமான், 

பசியாக இருக்கும் ஒருவர் சமையல் முடியும் வரை படுத்திருப்பதும், பின்பு அமர்வதும் அதன்பிறகு நிற்பதுமாக இருப்பார். 

அதைப்போல நம்மாழ்வாருக்கு அருள வந்த பெருமாள் புளியங்குடியில் கிடந்தும் வரகுணமங்கை அமர்ந்தோம், ஸ்ரீவைகுண்டத்தில் மீண்டும் காட்சி தருகிறார் என்று விளக்கமளிக்கிறார்.

நம்மாழ்வாரின் மங்களாசாசனம்

சித்திரை விழாவின்போது நம்மாழ்வார் அவரது பிறந்த தலமான ஆழ்வார் திருநகரிலிருந்து, அத்தலத்துப் பெருமான் பொலிந்து நின்றபின்னுடன் இங்கு எழுந்தருளுவார். பெருமாளை மங்களாசாசனம் செய்தபின் அன்ன வாகனத்தில் எழுந்தருளுவார்.

அவ்வேளையில் கள்ளபிரான், பொலிந்து நின்றபிரான், வரகுணமங்கை வெற்றி இருக்கை பெருமாள், திருப்புளியங்குடி காய்சினவேந்தன் பெருமாள் ஆகிய நால்வரும் கருடசேவை சாதிப்பார்.

பக்தர்கள் எதற்காக இங்குப் பிரார்த்தனை செய்கிறார்கள்?

பக்தர்கள் பிறவாநிலை கிடைக்க இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர். 

அதில் சூரிய தோஷம் விளக்குவதற்காக இங்கு வேண்டிக்கொள்கின்றனர். 

பக்தர்களின் பிரார்த்தனை நிறைவேற இங்குள்ள கருடனுக்குச் சந்தன காப்பிட்டு வழிபடுகின்றனர்.

நவதிருப்பதி என்று கூறப்படுபவை எவை?

  1. சூரியன் - ஸ்ரீவைகுண்டம். 
  2. சந்திரன் - வரகுணமங்கை(நத்தம்). 
  3. செவ்வாய் - திருக்கோளூர். 
  4. புதன் - திருப்புளியங்குடி. 
  5. குரு - ஆழ்வார் திருநகரி. 
  6. சுக்ரன் - தென்திருப்பேரை. 
  7. சனி - பெருங்குளம். 
  8. ராகு - இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்களம் ).
  9. கேது - இரட்டைத் திருப்பதி.

பெருமாள் கோயில்களில் ஏன் நவகிரங்களுக்கு தனி சன்னிதி இருப்பதில்லை?

ஏனென்றால் பெருமாளே நவக்கிரகங்களாக செயல்படுகிறார். நவதிருப்பதிகள் என்பது சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக பார்க்கப்படுகிறது. 

ஏனென்றால் பெருமாளே நவக்கிரகங்களாகச் செயல்படுகிறார்.

எந்த ஊரில் வைகுண்டமும், கைலாசமும் அமையப்பெற்றுள்ளது?

பக்தர்கள் பிறவாநிலை வேண்டி சுவாமியை வணங்குகின்றனர். 

ஸ்ரீவைகுண்டத்தில் இறைவனின் ஸ்ரீவைகுண்ட நாதர் கோவிலும், கயிலாசநாதர் கோயிலும் அமையப்பெற்றுள்ளது.

மணித்துளி தரிசனம் என்பது என்ன?

வைகுண்ட ஏகாதசி அன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வர். இவ்வேளையில் சன்னிதியை அடைத்து விடுவர்கள். 

பின்பு கண்ணிமைக்கும் நேரத்தில் நடை திறந்து பெருமாளுக்கு  தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவார்கள். 

இதற்கு மணித்துளி தரிசனம் என்று பெயர். 

இவ்வேளையில் பெருமாளைத் தரிசித்தால் பிறப்பில்லா நிலை கிடைப்பதாக நம்பிக்கை.

ஸ்தல வரலாறு 

சோமுகன் என்னும் அசுரன் பிரம்மாவிடமிருந்து வேத சாஸ்திரங்களைத் திருடிச் சென்றதால் படைப்பு தொழில் நின்று போனது. 

தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்த பிரம்மாவிற்காக  மகாவிஷ்ணு அவருக்குக் காட்சி தந்து அசுரனை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். 

அவரின் வேண்டுதலுக்கு இணங்க இங்கு எழுந்தருளி வைகுண்டநாதர் என்ற திருநாமம் பெற்றார்.

வைகுண்டநாதர் ஏன் பால்பாண்டி என்ற பெயர் பெற்றார்?

பல ஆண்டுகளுக்கு முன்பு வழிபாடு இன்றி மறைந்து போன பெருமாள் சிலை ஆற்றங்கரை ஓரிடத்தில் புதைந்திருந்தது. மேய்ச்சலுக்கு வந்த அரண்மனைப் பசு தொடர்ச்சியாகப் புற்றில் பால் சுரந்ததை அறிந்து, பாண்டிய மன்னன் அவ்விடத்தில் பெருமாள் இருப்பதைக்கண்டு கோயில் எழுப்பி தினமும் பெருமாளுக்குப் பால் அபிஷேகம் செய்து பூஜித்தார். பாண்டிய மன்னன் பால் அபிஷேகம் ஏற்பாடு செய்த காரணத்தால் பெருமாளுக்கும் பால்பாண்டி என்ற பெயர் ஏற்பட்டது.

கோவில் திறக்கும் நேரம்

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

திருவிழா

வைகுண்ட ஏகாதசி, தை தெப்பத்திருவிழா

முகவரி

அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம்-628601,

துத்துக்குடி மாவட்டம்

தொலைபேசி எண்

04630256476

 

 

Google Map Image

 

Quiz

அருணனை சூரியனின் தேருக்கு முன்னால் வைத்தது யார்?
Add to Favorites

Other languages: English

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |