Pratyangira Homa for protection - 16, December

Pray for Pratyangira Devi's protection from black magic, enemies, evil eye, and negative energies by participating in this Homa.

Click here to participate

ஸ்ரீ ராமர் விஸ்வாமித்திரரின் யாகத்தைப் பாதுகாத்து, மரிச்சன் மற்றும் சுபாஹுவை தோற்கடித்தார்

விஸ்வாமித்திரரின் யாகத்தை காத்த ஸ்ரீ ராமர்

விஸ்வாமித்திரர் தனது யாகத்தை அசுரர்களிடமிருந்து பாதுகாக்க இளம் பாலகர்களான ஸ்ரீ ராமரையும் லட்சுமணனையும் அழைத்துச் சென்றார். வழியில் ஸ்ரீராமர் தாடகை என்ற அரக்கியை கொன்றார்.

அவரது வீரத்தைப் போற்றும் வகையில், விஸ்வாமித்திர முனிவரிடமிருந்து தெய்வீக ஆயுதங்களைப் பெற்றார். அதன் பிறகு, ஸ்ரீராமர், லக்ஷ்மணர் மற்றும் முனிவர் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

நடந்து செல்லும் போது, ​​ஸ்ரீராமர் , 'முனிவரே, உங்களுக்கு நன்றி, இந்த ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எனக்கு இப்போது தெரியும். இப்போது தேவர்களால் கூட என்னை வெல்ல முடியாது’ என்றுக் கூறினார்.

ஸ்ரீராமர் , 'முனிவரே, மரங்கள் நிறைந்த மலைக்கு அருகில் இருக்கும் அந்த இடம் என்ன ? நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அது யாருடைய ஆசிரமம்?'

'அதுதான் தபஸ்விகளை அரக்கர்கள் தொந்தரவு செய்து கொல்லும் இடம், இல்லையா? நான் அவர்களுடன் சண்டையிட வேண்டிய அந்த இடத்தைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.' எனக் கேட்டார்.

அதற்கு விஸ்வாமித்திர முனிவர், 'இந்த ஆசிரமம் வாமனருடையது. அவர் பல வருடங்கள் இங்கு தவம் செய்தார். அதனால் தான் இது சித்தாசிரமம் என்று அழைக்கப்படுகிறது.

'நானும் வாமனரிடம் பக்தி கொண்டவன். எனவே இந்த இடத்தையும் பயன்படுத்துகிறேன். அரக்கர்கள் இங்கு வந்து என்னைத் துன்புறுத்துகின்றனர், ஆனால் நீங்கள் அவர்களைத் தோல்வியுறசெய்வீர்.

முனிவர் ஸ்ரீ ராமரையும் லட்சுமணனையும் கைகளைப் பிடித்து ஆசிரமத்திற்குள் அழைத்துச் சென்றார். அங்குள்ள முனிவர்கள் (விஸ்வாமித்திரரின் சீடர்கள்) விஸ்வாமித்திரரைக் கண்டு மகிழ்ந்து அவரை வணங்கினர். ஸ்ரீராமனையும் லட்சுமணனையும் வரவேற்றனர்.

ஸ்ரீராமர் தன்னுடன் இருந்ததால் விஸ்வாமித்ரர் மிகவும் நிம்மதியையும் நம்பிக்கையையும் அடைந்தார். விஸ்வாமித்திரர் தனது யாகத்திற்கு இடையூறு விளைவிக்கும் அசுரர்களின் பிரச்சனையை எதிர்கொண்டார். மேலும் அவருக்கு  அபரிமிதமான சக்தி இருந்தபோதிலும், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெனில், யாகத்திற்கான ஸங்கல்பத்தினால், அவரால் ஆக்ரோஷமாக நடந்துகொள்ள  முடியவில்லை. ஸ்ரீராமரின் வருகையுடன், குறிப்பாக ராமர் தாடகயை கொன்று தனது வலிமையை வெளிப்படுத்திய பிறகு, விஸ்வாமித்திரரின் நம்பிக்கை அதிகரித்தது.

ஓய்வெடுத்த பிறகு, ஸ்ரீராமனும், லக்ஷ்மணனும் அதிகாலையில் எழுந்து, தங்கள் பிரார்த்தனைகளைச் முடித்தவுடன், முனிவரை வணங்கினர்.

அவர்கள் விஸ்வாமித்திரரிடம், 'முனிவரே, தயவுசெய்து இன்றே யாகத்தைத் தொடங்குங்கள்' என்று கேட்டுக்கொண்டனர் .

விஸ்வாமித்திரர் முழு கவனத்துடன் யாகத்தைத் தொடங்கினார்.

அப்போது பிற முனிவர்களிடம், ​​'அசுரர்களிடம் இருந்து யாகத்தை எப்போது பாதுகாக்க வேண்டும்?' என்று அவர்கள் கேட்டனர். 'விஸ்வாமித்திரர் யாகத்தைத் தொடங்கியவுடன் , அமைதியாக இருப்பார். அதை நீங்கள் இருவரும் ஆறு இரவுகள் பாதுகாக்க வேண்டும்.' என்றனர்.

ஸ்ரீ ராமரும் லக்ஷ்மணனும் ஆசிரமத்தை கவனமாகக் பாதுக்காத்தனர். ஆறு இரவுகள் தூங்கவில்லை. ஆறாம் நாள், ஸ்ரீராமர் லட்சுமணனிடம், 'எச்சரிக்கையாக இரு, தயாராக இரு' என்றார்.

அப்போது, ​​ஹோம குண்டத்தில் நெருப்பு எரிய, மந்திரங்கள் ஓத ஆரம்பித்தது. திடீரென்று வானத்திலிருந்து பலத்த சத்தம் கேட்டது. மாரீசனும் சுபாஹுவும் யாக மேடையை நோக்கி விரைந்தனர். எங்கும் ரத்த மழை பொழிய ஆரம்பித்தது.

ஸ்ரீராமர் வேகமாக எழுந்து லட்சுமணனிடம், 'இதோ, அசுரர்கள் தாக்க ஆரம்பித்துவிட்டனர் . நான் அவர்களை விரட்டுவேன்.' என்று சொன்னார். ஸ்ரீராமர் மரீச்சனை நோக்கி அம்பை எய்தினார். அவன் கடலில் தூக்கியெறியப்பட்டான். பின்னர் அவர் சுபாஹுவை தாக்கி கொன்றார். ஸ்ரீராமர் தனது அம்புகளைப் பயன்படுத்தி மாரீசனுக்கும் சுபாஹுவுக்கும் துணையாக வந்த மற்ற அசுரர்களை வீழ்த்தினார்.

அசுரர்களை வென்றதால், ஸ்ரீராமர் முனிவர்களை மிகவும் மகிழ்வித்தார். முனிவர்கள் அவரைப் பாராட்டினார்கள். யாகம் முடிந்ததும், விஸ்வாமித்திரர், 'ஸ்ரீராமா, நீ என்னைப் பெருமைப்படுத்தி, என் விருப்பங்களை நிறைவேற்றினாய்' என்றார்.

பின்னர், அனைவரும் ஒன்றாக மாலை பூஜை செய்தனர்.

ஸ்ரீ ராமரின் குணம் நமக்கு உணர்த்தும் பாடம்:

தெய்வீக சக்தி மற்றும் திறமைகள்:

ஸ்ரீ ராமர் விஸ்வாமித்திர முனிவரிடமிருந்து தெய்வீக ஆயுதங்களைப் பெற்றார். அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக் கொண்டார். இது அவரது நிகரற்ற வலிமையையும் போருக்கான தயார் நிலையையும் காட்டுகிறது.

தர்மத்தின் பாதுகாவலர்:

ஸ்ரீ ராமர் ஆறு இரவுகள் ஓய்வின்றி யாகத்தை அரக்கர்களிடமிருந்து பாதுகாத்து, நீதியைப் பாதுகாப்பதில் தனது அர்ப்பணிப்பை உணர்த்தி, நன்மையின் பாதுகாவலராக விளங்கினார் .

மன உறுதியும் விடாமுயற்சியும்:

சவாலான சூழ்நிலைகளில் கூட, ஒரு பணியில் உறுதியாக இருப்பதன் முக்கியத்துவத்தை அவர்  பிரதிபலிக்கிறார். மேலும் இலக்குகளை அடைவதில் உறுதி மற்றும் விடாமுயற்சியுடன் இருந்தால்  நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்துகிறார் .

இரக்கமும் கடமையும்

ஸ்ரீராமர் விஸ்வாமித்திர முனிவருக்கு உதவி செய்து, அசுரர்களை தயக்கமின்றி வென்று தனது கடமையை நிறைவேற்றினார். இது முனிவர்கள் மற்றும் தெய்வீக செயல்பாடுகள் மீதான அவரது பொறுப்புணர்வு மற்றும் இரக்க உணர்வை எடுத்துக்காட்டுகிறது.

ஊக்கமளிக்கும் தலைவர்:

திறமையான தலைவர்கள் வலிமையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், மற்றவர்கள் மீது நம்பிக்கையையும் தூண்டுகிறார்கள். இன்று வலுவான தலைமைத்துவம் ஒரு குழு அல்லது சமூகத்திற்குள் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வளர்ப்பதைப் போலவே, அவரது நடவடிக்கைகள் விஸ்வாமித்திரருக்கும் மற்ற முனிவர்களுக்கும் உறுதியளித்தன.

143.2K
21.5K

Comments

Security Code
51296
finger point down
தங்களின்அருமையான பதிவுகள் மனிதனை தான் யார் என்று அறியவும் சக மனிதனை மனிதாபிமான முறையில் நடத்தவும் உதவுகிறது. நன்றி -User_smih3n

தனித்துவமான இணையதளம் 🌟 -பாலா

ஆர்வமூட்டும் வலைத்தளம் -ஜானகி நாராயணன்

இது சாமானியர்களுக்கு ஓரு பொக்கிஷம் -முரளிதரன்

சிறந்த website.. thanks🙏🙏 -தைலாம்பாள்

Read more comments

Knowledge Bank

ஸ்வர்கம் பெறுவதும் மோட்சம் பெறுவதும் ஒன்றா?

இல்லை. ஸ்வர்த்தில், ஒருவர் பெரும் இன்பங்களை அனுபவிக்க முடியும். ஸ்வர்கம் என்பது பூமியில் செய்யப்படும் நற்செயல்களுக்கான வெகுமதியாகும். ஆனால் சிறிது காலம் கழித்து, நீங்கள் மீண்டும் பூமியில் பிறக்க வேண்டும். மோட்சம் என்றால் பிறப்பு இறப்புகளின் நிரந்தர முடிவு என்று பொருள்.

ஆதியா தேவி யார்?

கிருத யுகத்தில் - திரிபுரசுந்தரி, திரேதா யுகத்தில் - புவனேஸ்வரி, துவாபர யுகத்தில் - தாரா, கலியுகத்தில் - காளி.

Quiz

கீழ்க்கண்ட புத்தகங்களில் வராஹமிஹிராச்சாரியரால் எழுதப்பட்டது எது?
தமிழ்

தமிழ்

இராமாயணம்

Click on any topic to open

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...