கொடியூரில் ஒரு பெரிய பணக்காரரான கோதண்டம், தனது மனைவி பார்வதியின் கடுமையான வார்த்தைகளால் மன அமைதியை இழந்தார். கோதண்டம் தனது மனைவி பாசமாக இருக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் பார்வதியின் பேச்சு மாறவில்லை. பார்வதியின் இந்தப் பழக்கத்தினால், அவளது மகன் பெரியசாமியின் மனைவி மீனா, மாமியாருடன் வாழ முடியாது எனக் கூறி, தனது தந்தையின் வீட்டிற்கு திரும்பினாள்.
மீனாவின் தந்தை, தனது மகளிடம், 'நீ உன் கணவனுடன் வாழாமல் இங்கு எவ்வளவு நாள் இருக்க முடியும்?' என்று கூறி, மீனாவை திருபிச்செல்ல சொன்னார். மீனா அதற்க்கு ஒற்றுக் கொள்ளவில்லை. பிறகு மீனாவின் தந்தை கோதண்டத்துடன் கலந்து பேசி அவர்களை தனி குடித்தனம் வைப்பதே சரி என்று முடிவெடுத்தார்.
அதன் பிறகு, மீனா ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள். ஆனால், கோதண்டம் தனது பேரனுடன் இருக்க முடியாமல் வருந்தினார். ஒரு நாள், கோதண்டம் பார்வதியுடன் தன் பேரனைப் பார்க்க மகன் வீடிர்க்குச் சென்றான். அங்கு, பெரியசாமி அவர்களை அன்புடன் வரவேற்றான்.
அப்போது, ஒரு புடவை வியாபாரி அங்கு வந்து, பெரியசாமியின் மனைவியான மீனாவிடம் 'புதிய புடவைகளைக் கொண்டு வந்திருக்கிறேன்' என்று சொன்னான். மீனா, அதற்குப் பதிலாக, 'போன தடவை நீங்கள் கொடுத்த புடவைகள் சாயம் போய் விட்டன. இனிமேல் உங்களை நம்ப மாட்டேன்' என்று கடுமையாகப் பேசி, வியாபாரியை வெளியே அனுப்பிவிட்டாள்.
இதைப் பார்த்தும், கோதண்டம், மீனாவைப் பார்த்து, 'நீ புடவை வியாபாரியிடம் கடுமையாகப் பேசினாய், ஆனால் உன் மாமியாரிடம் ஏன் மௌனமாக இருக்கிறாய்?' என்று கேட்டார். மீனா பதிலாக, 'அவர் என் கணவனின் தாய். இங்கு உறவு நிலைக்க வேண்டும் என்றால், நான் பொறுமையுடன் இருக்க வேண்டும்' என்று கூறினாள்.
கோதண்டம், மீனாவின் பொறுமையையும் விவேகத்தையும் கண்டு மகிழ்ந்தார். இதைக்கண்ட பார்வதி தன் தவறைப் புரிந்து கொண்டு மாறினாள். இப்போது, கோதண்டத்தின் குடும்பம் சமாதானமாக வாழ ஆரம்பித்தது.
இந்தக் கதையின் பாடம் என்னவென்றால், பொறுமை, புரிதல், தன்னடக்கம் மற்றும் பணிவு ஆகியவற்றின் மூலம், குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் அமைதி பெற முடியும். கதாப்பாத்திரங்கள் காட்டுவது, கடுமை மற்றும் தற்பெருமை மோதலுக்கு வழிவகுக்கும். ஆனால் புத்திசாலித்தனமும், உறவுகளை பாதுகாக்கும் மனப்பங்கும் இருந்தால், கடினமான சூழ்நிலைகளையும் சுலபமாக தீர்க்க முடியும். உறவுகளில், குறிப்பாக மாமியாரும் மருமகளும் போன்ற நெருக்கமான உறவுகளில், பொறுமையுடன் இருப்பது மற்றும் பொருத்துக் கொள்வது, ஒருங்கிணைந்த மற்றும் திருப்திகரமான குடும்ப வாழ்க்கையை உருவாக்க உதவும்.
பிரஹலாதனின் கூற்றுப்படி, பக்தியின் ஒன்பது வடிவங்கள் - 1. ஶ்ரவணம் - பகவானின் மகிமையைக் கேட்பது (எ.கா. பரீக்ஷித்) 2. கீர்த்தனம் - அவரது மகிமையைப் பாடுவது (எ.கா. சுகதேவன்) 3. ஸ்மரணம் - அவரைத் தொடர்ந்து நினைவு செய்தல் (எ.கா. பிரஹலாதன்) 4. பாதசெவனம் - அவரது பாதங்களை சேவித்தல் (எ.கா. லக்ஷ்மி) 5. அர்ச்சனை - உடல் வழிபாடு (எ.கா. பிருது) 6. வந்தனம் - நமஸ்காரங்கள் (எ.கா. அக்ரூரன்) 7. தாஸ்யம் - உங்களை பகவானின் அடியாராகக் கருதுதல் (எ.கா. அனுமான்) 8. சக்யம் - அவரை உங்கள் நண்பராகக் கருதுவது (எ.கா. அர்ஜுனன்) 9. ஆத்மநிவேதனம் - பகவானிடம் முழுமையாக சரணடைதல் (எ.கா. பலி மன்னன்).
பிரம்மவாதி என்பவர் வேதத்தின் முழு பொருளும் பற்றிப் பேசக் கூடியவர் ஆவார். பிரம்மவாதினி பெண் அறிஞர் ஆவார். இவர்கள் பிரம்மவாதியின் பெண்பால் ஆகும். ரிஷி என்பவர் மந்திரங்களை உபதேசிப்பவர் ஆவார். ரிஷிகா என்பவர் மந்திரங்களை உபதேசிக்கும் பெண்கள் ஆவார். அனைத்து ரிஷிகாகளும் பிரம்மவாதினி ஆவார்கள், ஆனால் பிரம்ம வாதினி அனைவரும் ரிஷிகா அல்ல.
விநாயகரின் பூஜைக்கு துளசி ஏன் எடுப்பதில்லை
படிப்பில் வெற்றி பெற மேதா தட்சிணாமூர்த்தி மந்திரம்
ௐ நமோ ப⁴க³வதே த³க்ஷிணாமூர்தயே மஹ்யம் மேதா⁴ம் ப்ரஜ்ஞாம் ....
Click here to know more..ருணஹர கணேச ஸ்தோத்திரம்
ௐ ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேஶம் லம்போதரம் பத்மதலே நிவ....
Click here to know more..Astrology
Atharva Sheersha
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Festivals
Ganapathy
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rituals
Rudram Explained
Sages and Saints
Shani Mahatmya
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta
आध्यात्मिक ग्रन्थ
कठोपनिषद
गणेश अथर्व शीर्ष
गौ माता की महिमा
जय श्रीराम
जय हिंद
ज्योतिष
देवी भागवत
पुराण कथा
बच्चों के लिए
भगवद्गीता
भजन एवं आरती
भागवत
मंदिर
महाभारत
योग
राधे राधे
विभिन्न विषय
व्रत एवं त्योहार
शनि माहात्म्य
शिव पुराण
श्राद्ध और परलोक
श्रीयंत्र की कहानी
संत वाणी
सदाचार
सुभाषित
हनुमान