சனாதன தர்மத்தின் அனைத்து புத்தங்களும் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகக் கூறுகின்றன:
உங்களைச் சுற்றியுள்ள உலகம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்போது மட்டுமே நீங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பெற முடியும்.
இதைப் புரிந்து கொள்ள நீங்கள் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை. இது எளிமையானது.
உங்கள் கண்கள், காதுகள், தோல், மூக்கு மற்றும் நாக்கு வழியாக உங்களுக்குள் செல்லும் உணர்வுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இவை மட்டுமே உங்கள் ஆதாரங்கள். இந்த ஐம்புலன்கள் வழியாக நம் உடம்பின் உள்ளே செல்வதெல்லாம் உடம்பிற்க்கு வெளியில் இருந்து வருகிறது.
வெளியில் இருப்பது துன்பமானதாக இருந்தால், உள்ளே செல்வதும் துன்பகரமானதாகவே இருக்கும், அது உங்களையும் துன்பப்படுத்திவிடும்.
எனவே, நீங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், உங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியடையச் செய்யுங்கள்.
இதனால்தான், சனாதன தர்மத்தில், நாம் நமக்காக எப்போதாவது தான் பிரார்தனை செய்கிறோம். பிரார்த்தனைகளில் நீங்கள் பெரும்பாலும் பன்மை வார்த்தைகளைக் காணலாம்: நாங்கள், எங்களுக்குக் கொடுங்கள்-(மிகவும் அரிதாகவே) எனக்குக் கொடுங்கள். குறிப்பாக வேதங்களில் நானும் என்னையும் காண்பது மிகவும் அரிது. ஒருமை வடிவத்தில் பயன்படுத்தப்பட்டாலும், அது பெரும்பாலும் பரந்த பொருளைக் கொண்டுள்ளது, பன்மைத்தன்மையைக் குறிக்கிறது.
ஸர்வே ப⁴வந்து ஸுகி²ன꞉
ஸர்வே ஸந்து நிராமயா꞉
ஸர்வே ப⁴த்³ராணி பஶ்யந்து
மா கஶ்சித்³து³꞉க²பா⁴க்³ப⁴வேத்
(மொழிபெயர்ப்பு: எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், அனைவரும் நோயிலிருந்து விடுபடட்டும். அனைவரும் மங்களகரமானதை மட்டுமே பார்க்கட்டும், யாரும் துன்பப்படக்கூடாது.)
நீங்கள் கூர்ந்து கவனித்தால், இதுவும் மிகவும் 'சுயநல' பிரார்த்தனை தான். எல்லோரும், குறிப்பாக உங்களைச் சுற்றியுள்ளவர்கள், வசதியாக இருக்கட்டும்-ஏனெனில் அப்போது தான் நீங்கள் வசதியாக இருப்பீர்கள். அவர்கள் வசதியாக இல்லையென்றால், அவர்கள் உங்களை வசதியாக இருக்க விடமாடார்கள்.
இதைக் கருத்தில் கொள்ளுங்கள்:
எதிரி நாடு உங்களைத் தாக்கும். ஏன்? அவர்களுக்கு அமைதி இல்லாததால், அவர்கள் அதிருப்தி அடைந்து, பயத்தில் வாழ்கின்றனர். எனவே, நீங்கள் பாதுகாப்பாக இருக்க, உங்கள் எதிரி அமைதியைக் காணவும், திருப்தி அடையவும், உங்களுக்கு பயந்து வாழவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
அனைவரும் நலமாக இருக்கட்டும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள், குறிப்பாக உங்களுக்கு நெருங்கியவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், உங்கள் பெரும்பாலான நேரத்தை மருத்துவமனைகள் அல்லது மருத்துவர்களிடம் செலவிடுவீர்கள்.
எல்லோரும் பத்ரம் (நல்ல விஷயங்களை) பார்க்கட்டும். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் அனுபவங்கள் நேர்மறையாக இருக்கட்டும். உங்களுக்கு இது தெரியும்: உங்கள் மனைவி, மகன் அல்லது மகள் வேலையில் சிக்கலை எதிர்கொண்டால், அதன் உணர்ச்சிகரமான சுமையை நீங்கள் தாங்குகிறீர்கள்.
யாரும் எந்த வகையிலும் துன்பப்பட வேண்டாம். அதனால் அவர்கள் தங்கள் துன்பங்களை உங்களிடம் அனுப்ப வேண்டாம்.
ஒருமுறை, ஒருவரிடமிருந்து ஒரு புத்திசாலித்தனமான சொல்லைக் கேட்டேன்:
'என் அண்ணன் என்னை விட பணக்காரனாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன். அதனால் அவர் என்னிடம் பணம் கேட்க மாட்டார்.'
இது ஒரு உணர்தல். உலகமும் உங்களைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் மட்டுமே, நீங்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பீர்கள்.
எனவே, உங்களுக்காக பிரார்த்தனை செய்வதை விட, மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பியுங்கள். இதை சனாதன தர்மம் நமக்கு எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் மாறுவீர்கள்.
பாதஞ்சல யோகசூத்திரம் II.9 இன் படி, அபினிவேஷம் என்பது - வாழ்க்கைக்கான தாகம். துக்கத்தை உண்டாக்கும் ஐந்து கிளேஷங்களில் இதுவும் ஒன்று. அபினிவேஷத்திற்குக் காரணம் தவறான எண்ணம்; நான் இந்த உடல் தான் என்பது.
ஒரு க்ஷத்திரியன் ராஜசூய யாகத்தைச் செய்து அரசராகிறார், மற்றும் ஒரு அரசர் வாஜபேய யாகத்தைச் செய்து சக்கரவர்த்தியாகிறார்.
மிகுதி மற்றும் முன்னேற்றத்திற்கான லட்சுமி மந்திரம்
ௐ ஶ்ரீம்ʼ ஹ்ரீம்ʼ க்லீம்ʼ மஹாலக்ஷ்மி மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி....
Click here to know more..புனர்பூசம் நட்சத்திரம்
புனர்பூசம் நட்சத்திரம் - குணாதிசயங்கள், சாதகமற்ற நட்சத....
Click here to know more..பெருமாள் 108 போற்றி
ஓம் ஹரி ஹரி போற்றி ஓம் ஸ்ரீஹரி போற்றி ஓம் நர ஹரி போற்றி ஓ....
Click here to know more..Astrology
Atharva Sheersha
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Festivals
Ganapathy
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rituals
Rudram Explained
Sages and Saints
Shani Mahatmya
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta
आध्यात्मिक ग्रन्थ
कठोपनिषद
गणेश अथर्व शीर्ष
गौ माता की महिमा
जय श्रीराम
जय हिंद
ज्योतिष
देवी भागवत
पुराण कथा
बच्चों के लिए
भगवद्गीता
भजन एवं आरती
भागवत
मंदिर
महाभारत
योग
राधे राधे
विभिन्न विषय
व्रत एवं त्योहार
शनि माहात्म्य
शिव पुराण
श्राद्ध और परलोक
श्रीयंत्र की कहानी
संत वाणी
सदाचार
सुभाषित
हनुमान