Special - Saraswati Homa during Navaratri - 10, October

Pray for academic success by participating in Saraswati Homa on the auspicious occasion of Navaratri.

Click here to participate

பொன்னார் மேனியனே

40.9K
6.1K

Comments

Security Code
79901
finger point down
சிவ சிவ சிவனே கண்களில் நீர் சொரிந்து கொண்டே இருக்கிறது குழந்தாய் -User_sjym6h

சிவன் ஓடி வந்துவிடுவார் இந்த இனிய குரலுக்கு... வாழ்த்துக்கள் -User_sjym7h

அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 -sivaramakrishna sharma

அறிவு வளமான இணையதளம் -நந்தன் முருகன்

Read more comments

பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 
கீளார் கோவணமுந்
திருநீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன்
தலைவாயெனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா
மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.
எம்மான் எம்மனையென்
றெனக்கெட்டனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி
பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 
பண்டே நின்னடியேன்
அடியாரடி யார்கட்கெல்லாந்
தொண்டே பூண்டொழிந்தேன்
தொடராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 
கண்ணாய் ஏழுலகுங்
கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப்
பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 
நாளார் வந்தணுகி
நலியாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன்
அடியேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும்
மழபாடியுள் மாணிக்கமே
ஆளா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 
சந்தா ருங்குழையாய்
சடைமேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய்
விடையேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 
வெய்ய விரிசுடரோன்
மிகுதேவர் கணங்களெல்லாஞ்
செய்ய மலர்களிட
மிகுசெம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 
நெறியே நின்மலனே
நெடுமாலயன் போற்றிசெய்யுங்
குறியே நீர்மையனே
கொடியேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே
மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே. 
ஏரார் முப்புரமும்
எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன்
மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன்
ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார்
பரலோகத் திருப்பாரே.

Knowledge Bank

தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?

தென்னிந்தியாவில் பக்தி இயக்கம் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படும் வைணவ அருட்தொண்டர்கள் மற்றும் நாயன்மார்கள் என்று அழைக்கப்படும் சைவ அருட்தொண்டர்களால் தொடங்கப்பட்டது.

சிசுபாலன் மற்றும் தண்தாவக்ரன் யார்?

சிசுபாலன் சேதியின் அரசன். தண்தாவக்ரன் கருஷாவின் அரசர். அவர்கள் துவாபர யுகத்தின் முடிவில் பூமியில் ஜெய-விஜய அவதாரங்கள். இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரால் கொல்லப்பட்டனர்.

Quiz

ஐம்பெரும் ஆலயங்களில் சிவபெருமான் எங்கு திரிபுர தாண்டவம் ஆடினார்?
Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon