பிருகதீஸ்வர மாஹாத்மியம்
(தமிழ் மொழியாக்கம்)
முதல் அத்தியாயம்
சூத முனிவர் கூறுகிறார்
முன்பு ஒரு சமயம் கயிலையில் தேவர்கள் புடைசூழ பார்வதியும் பரமேஸ்வரனும் வீற்றிருந்தனர். அப்பொழுது சிவபெருமானிடத்தில் பார்வதி தேவியார் "தேவதேவா ! தாங்கள் மும்மூர்த்திகளின் ஸ்வரூபமாகவும், உலகில் உள்ள உயிர்களில் நீக்கமற நிறைந்தும் இருக்கிறீர்கள், எனது உள்ளத்தில் நீண்ட காலமாக இருக்கும் ஐயத்தை தங்க ளிடம் வெளியிடுகிறேன் தயைகூர்ந்து எனது ஐயத்தை நீக்கியருள வேண்டும்" என்றாள்.
இதைக்கேட்ட சிவபெருமான் அம்மையே! உனது உள்ளத்தில் தோன்றியுள்ள ஐயத்தை நான் அறிவேன். உனது ஐயத்தைக்கேள்” என்றார். இதைக்கேட்ட பார்வதி தேவி மிகவும் அகமகிழ்ந்து தனது ஐயத்தைக் கூறத் தொடங்கினாள்.
இரண்டாம் அத்தியாயம்
ஸ்வாமி! கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகிய யுகங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. கலியின் இறுதியில் “ப்ரளயம்” (கலியுகத்தின் இறுதியில் இவ்வுலகம் அழிந்து விடுகின்றது. இந்த நிகழ்ச்சிக்குத்தான் “ப்ரளயம்” என்பது) ஏற்படும்போது மஹாசூர்யன் ஆண்டுகள் தொடர்ந்து பிரகாசிக்கின்றான். இதன் காரண மாக இவ்வுலகத்திலுள்ள மரம், செடி, கொடிகள், சமுத்தி ரம், மற்றும் உயிரினங்கள் முதலியவைகளிடமுள்ள ரஸங் கள் காய்ந்து விடுகின்றன. இந்த நிலையில் பல்லாண்டுகள் தொடர்ந்து மழையின்மையால் பஞ்சம் ஏற்பட்டு அனைத்து உயிர்களும் அழிகின்றன. அடுத்து காற்று மிகப் பயங்கர மாக வீசுகின்றது. மிகப்பெரும் மேகங்கள் தொடர்ந்து 100 ஆண்டுகள் மழைபொழிவதால் எங்கும் தண்ணீர் சூழ்ந்து உலகமே நீரில் ஆழ்நது அழிந்துவிடுகின்றது.
ஸ்வாமி! உங்களது ஆணையால் மீண்டும் இவ்வுலகம் தோன்றுகின்றது. ருத்திரன், விஷ்ணு, பிரமன் ஆகியவர் களின் மூலமாக இவ்வுலகை மீண்டும் உருவாக்குகின்றீர்கள். உமது ஆணையால் பதினான்கு உலகங்களும், இவற்றிலுள்ள மலைகள், நதிகள், சமுத்திரங்கள், தேவர்கள், அசுரர்கள், திக்பாலகர்கள், முநிவர்கள், மநுக்கள், ஆகியோர் இயங்கு கின்றனர். பிரமன் ஆக்கல் தொழிலையும், விஷ்ணு காத்தல் தொழிலையும். ருத்ரன் அழித்தல் தொழிலையும் மேற்கொள் கின்றனர். சூரியன், தீ, காற்று, கோள்கள் முதலியவை களும், ரிஷிகள், மநுக்கள், ஆதிசேடன், ஆகியோரும் உனது ஆணையின்படி உலகைக் காக்கின்றனர்.
இங்ஙனம் இயங்கும் உலகம் த்வீபங்களாகப் பகுக்கப் படுகின்றன. அவைகள் 1. ஜப்பு, 2. ப்ளக்ஷ, 3. சால்மலி 4. குச, 5. க்ரௌஞ்ச, 6. சாக, 7. புஷ்கர என்ற பெயரில் விளங்குகின்றன. இவற்றில் ஜம்பூத்வீபம் என்பது புண்ணியம் மிகுந்த த்வீபம். இந்த த்வீபம் ஒன்பது நாடுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதில் இமயமலை தொடங்கி சேது வரையில் கொண்ட பகுதிகளே பாரத வர்ஷம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த புண்ணிய பூமியில் பெருகும் நதிகளும் புனிதமிக்கன. கங்கை, யமுனை அந்தர்வாகினியான சரஸ்வதி, நர்மதை, கபிலை, துங்க பத்ரை, பாலாறு, சோணையாறு, கிருஷ்ணாநதி, பீமாநதி, கோதாவரி, கா விரி, தாம்ரபர்ணி, முதலிய பற்பல புனித
நதிகள் உள்ளன. இதில் கேதாரம், பிரபாஸ க்ஷேத்திரம், குருக்ஷேத்திரம், பிரயாகக்ஷேத்ரம், காலஞ்சரம், மஹா காலம், புஷ்கரக்ஷேத்ரம், பதரீவனம், சித்திரகூடம், நைமி சாரண்யம், கங்கோத்ரி. அமர்நாத், கோகர்ணம். திரியம் பகம், ஸ்ரீசைலம். அருணாசலம், காளஹஸ்தி, விருத்தாசலம், கும்பகோணம், புண்டரீகபுரம், முதலிய க்ஷேத்திரங்களும், மஹேந்திரமலை, கயிலைமலை, விந்தியமலை, இமயமலை, முதலிய மலைகளையும், அயோத்யாபுரி, மதுராபுரி, மாயாபுரி, காசீபுரி காஞ்சீபுரி, அவந்திபுரி, அவந்திபுரி, துவாரகாபுரி, முதலிய ஏழு. புண்ணிய நகரங்களும் மோக்ஷத்தையே நல்கவல்லன. இப்படிப்பட்ட நதிகள் ஓடும் பகுதிகளில் அந்தந்த நதிக் கரைகளில் தேவர்களாலும், முநிவர்களாலும் பல சிவலிங் கங்கள் ஸ்தாபிக்கப்பெற்றும், பல சிவலிங்கங்கள் ஸ்வயம்பு வாகத் தோள்றியும் (இயற்கையாகவே உண்டான சிவலிங் கங்களும்) உள்ள க்ஷேத்திரங்கள் அநேகம் உள்ளன. -
இவைகளில் சிவ க்ஷேத்திரங்களும், விஷ்ணு க்ஷேத்திரங் களும் ஒவ்வொரு சதுர்யுகங்களிலும் அழிந்து அழிந்து தோன்றுகின்றன. அழிந்து போன இந்த க்ஷேத்திரங்கள், மீண்டும் எப்படித் தோன்றுகின்றன? என்பதே எனது ஐயம் ? இவ்வையத்தைந் தாங்கள் நீக்கியருளவேண்டும்" என்றாள் தேவி.
இதைக் கேட்ட சிவபெருமான் தேவியின் திருமுகத் தைச் சிறிது நேரம் நோக்கியபின் கூறத்தொடங்கினார்.
மூன்றாம் அத்தியாயம்
தேவி ! நீ கேட்ட கேள்வி மிகச் சிறப்பானது. உனது கேள்விக்குரிய செய்தியை மிகச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.
கிருதயுகம், திரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் ஆகியவற்றில் ஐம்பத்தாறு தேசங்களைப் பல மன்னர்கள்

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2023 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |