பாஞ்சஜன்யம்

 

கிருஷ்ணருடைய சங்கின் பெயரென்ன?

பாஞ்சஜன்யம்.

கிருஷ்ணருக்கு பாஞ்சஜன்யம் எப்படி கிடைத்தது?

பஞ்சஜன் என்ற அஸுரன் கிருஷ்ணருடைய குருவின் மகனை தின்றுவிட்டான். கிருஷ்ணர் அவனை கொன்று அவனுடைய வயிற்றை கிழித்து பார்த்த பொழுது, வயிற்றில் அந்த பையன் காணவில்லை. 

அவனை கிருஷ்ணர் யமலோகத்திலிருந்து மீட்டு வந்தார். 

பஞ்சஜனனின் எலும்புகள் ஒரு சங்காக மாறியிருந்தன. 

அதை கிருஷ்ணர் தனக்காக வைத்துக்கொண்டார். 

பாகவதம்ʼ (10.54) பஞ்சஜனஸ்ய அங்கப்ரபவம் பாஞ்சஜன்யம் என்று கூறுகிறது.

பாஞ்சஜன்யம் ஏன் விசேஷமானது?

கிருஷ்ணருடைய சங்கான பாஞ்சஜன்யம், சங்குகளின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. அது சங்குகளில் மிகப்பெரியது. பாலைப்போல் வெண்ணிறமும், பௌர்ணமி நிலவைப்போல் பிரகாசமுமானது. பாஞ்சஜன்யம் விலைமதிப்பற்ற  கற்கள் பதிக்கப்பட்டு தங்க வலையால்  மூடப்பட்டது.

பாஞ்சஜன்யம் ஊதப்படும்பொழுது என்ன ஆகிறது?

பாஞ்சஜன்யத்தின் ஒலி மிக உரக்கமாகவும், 

மிகவும் திகிலூட்டுவதாகவும் இருக்கும். 

அதன் ஒலி ஏழு ஸ்வரங்களில் ருஷபத்துக்கு சமமாகவும் இருக்கும். 

கிருஷ்ணர் பாஞ்சஜன்யத்தை ஊதும்பொழுது அதன் ஒலி சுவர்க்கம், பாதாளத்தோடு கூட மூன்று உலகங்களையும் நிரப்பும். 

வானத்தில் ஒலிக்கும் இடியைப்போன்ற அந்த சப்தம் மலைகளிலிருந்தும் காடுகளிலிருந்தும் நதிகளிலிருந்தும் எதிரொலித்துக்கொண்டு அனைத்து திக்குகளிலும் பரவும். 

அவர் பாஞ்சஜன்யத்தை ஊதினால், அவருடைய பக்கம் இருப்பவர்களின் சக்தி பல மடங்கு அதிகரிக்கும். 

அதே சமயத்தில் எதிரிகள் பயபீதியடைந்து தோல்வியை தழுவ சரிவடைவார்கள். 

போர்க்களத்திலிருக்கும் குதிரைகளும் யானைகளும் மலமூத்திரம் கழிக்கும்.

கிருஷ்ணர் பாஞ்சஜன்யத்தை எவ்வளவு முறை ஊதினார்?

அ. பாண்டவர்களும் கௌரவர்களும் குருக்ஷேத்திரத்தில் வந்து சேர்ந்த பொழுது.

ஆ. அவர்களுடைய சேனைகள் எதிரும் புதிருமாக அணிவகுத்து நின்ற பொழுது.

இ. நாள்தோரும் யுத்தம் ஆரம்பிக்கும் பொழுது.

ஈ. அர்ஜுனன் பீஷ்மருடன் யுத்தம் செய்ய சபதமெடுத்த பொழுது.

உ. மற்ற பாண்டவர்களுடன் யுத்தம் செய்து கொண்டிருக்கும் பீஷ்மர் இருந்த இடத்திற்கு அர்ஜுனன் விரைந்த பொழுது.

ஊ. ஜயத்ரதனை கொல்ல அர்ஜுனன் சபதமெடுத்த பொழுது.

எ. அர்ஜுனனும் ஜயத்ரதனும் போர் செய்துகொண்டிருக்கும் பொழுது, பல முறை.

ஏ. எந்த நிலையிலும் போரிலிருந்து பின்வாங்காத ஸம்சப்தகர்களை அர்ஜுனன் வதம் செய்த பொழுது.

ஐ. கர்ணன் வதம் செய்யப்பட்ட பொழுது.

ஒ. துரியோதனன் இறந்த பொழுது.

ஓ. சால்வனுடன் கிருஷ்ணர் தானே யுத்தம் செய்த பொழுது, மூன்று முறை.

ஔ. ஜராசந்தன் மதுரா நகரத்தை முற்றுகையிட்ட பொழுது.

கிருஷ்ணர் பாஞ்சஜன்யத்தை சமிக்ஞையாக உபயோகித்தாரா?

ஆமாம். அர்ஜுனன் - ஜயத்ரதனின் போருக்கு முன், தனது சாரதியிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்:

யுத்தத்தின் இடையில் நான் எப்பொழுதேனும் பாஞ்சஜன்யத்தை ஊதினால் அதற்கு அர்ஜுனன் ஆபத்தில் இருக்கிறான் என்று பொருள். அவ்வாறான கட்டத்தில் நீ உடனே என் தேரை எடுத்துக்கொண்டு யுத்த களத்துள் வரவேண்டும். நீ வந்த உடன் நான் போரில் நுழைவேன்.

மற்றவர்கள், பாஞ்சஜன்யம் ஊதப்படுவதற்கு  என்னென்ன விளக்கம் கொடுத்தனர்கள்?

ஒரு முறை துரோணர், பாஞ்சஜன்யம் ஊதப்பட்டால், அர்ஜுனன் பீஷ்மரை தாக்கப்போகிறான் என்று கூறினார். பாஞ்சஜன்யம் ஊதப்பட்டால், அர்ஜுனன் ஆபத்தில் இருக்கிறான் என்று அர்த்தம் என்று யுதிஷ்டிரர் ஒரு முறை கூறினார்.

 

Recommended for you

 

Video - விஷ்ணுவின் 5 ஆயுதங்கள் 

 

விஷ்ணுவின் 5 ஆயுதங்கள்

 

 

Video - Shani Graha Stotram 

 

Shani Graha Stotram

 

 

Video - Vishnu Mangala Stotram 

 

Vishnu Mangala Stotram

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2022 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize