பிரம்மம் என்பது மெய்ப்பொருள்; அது முழுமை யானது. ஒப்பற்றது. ஆனந்தமாகவும் அறிவாகவும் உள்ளது. அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கினையும் அளிக்கவல்லது. உலக மாயையிலிருந்து விடுபட்டது. மக்கள் அனைவரும் கண்டு களிக்கும் வண்ணம் குருவாயூரில் எழுந்தருளியிருக்கிறது. இது நாம் பெற்ற புண்ணியம்.
(1)
கிடைப்பதற்கு அரிதான பொருள் எளிதில் கிடைத் துள்ளது. மனதாலும் வாக்காலும் உடலாலும் வேறொன்றை வழிபடுவது கேவலம் அல்லவா. ஆனால் பொருள்கள் அனைத்திற்கும் உயிராக விளங்குபவர் குருவாயூரில் இடம் பெற்ற தலைவராம். பிறவித் துன்பத்தைப் போக்க அவரையே உறுதி பூண்ட உள்ளத் தோடு எந்நாளும் போற்றுகின்றோம்.
(2)
ஐயனே உன்னுடைய அழகுத் திருவுருவம் இராட்சசம் தாமஸம் ஆகிய குணங்களை விட்டு விடுபட்டு விலகி நிற்கின்றது; பஞ்ச பூதங்களும் ஐம்பொறிகளும், சத்துவ குணமும் உருவாகியது என்று வியாசர் அருளு கின் றார். தூய்மைக்குத் தூய்மை சேர்க்கும் நின்

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |