கோவர்தன கோபாலனின் ஆசீர்வாதத்திற்கான மந்திரம்
ௐ நமோ கோ³வர்த⁴னோத்³த⁴ரணாய கோ³விந்தா³ய கோ³குலநிவாஸாய கோ³....
Click here to know more..ஆலயங்கள் சமுதாய மையங்கள்
கோவில்களின் சமூக முக்கியத்துவம் பற்றிய புத்தகம்....
Click here to know more..பரசுராம அஷ்டகம்
கேஶவம்ʼ ஜகதீஶ்வரம்ʼ த்ரிகுணாத்மகம்ʼ பரபூருஷம்ʼ பர்ஶுரா....
Click here to know more..மத்திய தேசத்தில் சரயூ என்ற நதியின் கரையில் காலிபுரம் என்ற நகரத்தில் ஒரு பிராமணன் வசித்து வந்தான். இதே நகரத்தில் வேறு ஒரு நெறிகெட்ட தீய ஒழுக்கமுள்ள பிராமணனும் இருந்து வந்தான். இரண்டாமவன் குடிகாரன். குடி இல்லாமல் ஒரு நாள் கூட இருக்கமாட்டான். இவன் மனைவி தர்ம நெறி தவறாதவளாகவும், பதிவிரதையாகவும் இருந்தாள். இவள் பெயர் சுமணா என்பதாகும். இவள் கணவன் பரஸ்திரீகளுடன் சுகிப்பவன். சிறிது காலம் சென்ற இந்த துர்ப்பிராமணன் இறந்தான். இவன் மனைவி கணவனுடன் உடன்கட்டை ஏறி உயிர்துறந்தாள். முதல் பல காலம் வரை சுவர்க்கம் சுகம் அனுபவித்தாள். அதன்பின் புண்யம் தீரவே ஒரு வசதியான நல்ல குடும்பத்தில் கணவன் மனைவியாகவே பிறந்தனர். மனைவியின் புண்யவசத்தால் பணம், வசதி நிறைந்திருந்தன. ஆனால் கணவனின் பாவத்தால் இவர்களுக்கு சிறுவயதிலிருந்தே பல நோய்கள் ஏற்பட்டன. இவர்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை.
இதற்குப் பரிஹாரம் வருமாறு: தன் வீட்டில் உள்ள சொத்தில் 6ல் ஒரு பங்கைத் தானம் பண்ணவேண்டும். காயத்ரி மூல மந்திரத்தை 3 லட்சம் முறை ஜெபம் செய்ய வேண்டும். இதில் 10ல் ஒரு பங்கு ஹோமம், அதில் 10ல் ஒரு பங்கு தர்ப்பணம். அதில் 10ல் ஒரு பங்கு மார்ஜனம் முதலியவை செய்யவேண்டும். அதன்பின் பகவான் கோவிந்த நாமாவை ஓத வேண்டும். விசாக கார்த்திகை மாதங்களில் தினமும் காலையில் ஸ்நானம் செய்ய வேண்டும். அதன்பின் கிருஷ்ண சதகம் கிரந்தம் பூர்ஜ மந்திரத்தில் எழுதி வைக்க வேண்டும். பின் தினமும் கிருஷ்ண நாமத்தை எழுத வேண்டும். பகவானின் விக்கிரஹத்தின் முன்னிலையில் பூஜை செய்ய வேண்டும். ஹரிவம்ச புராணம் பாராயணம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் இவர்கள் பாவம் தீரும். இவர்கள் உடல் நலம் பெற்று நிம்மதி அடைவார்கள். பின்னால் இவர்களுக்கு நல்ல குழந்தைகள் ஏற்படும்.
சித்திரை 3ம் பாதத்தில் பிறந்தவன் பரிகாரம்
முன்பொரு காலத்தில் அயோத்யா நகரத்திற்கு தெற்கே மூன்று யோசனை தூரத்தில் சுதர்மபுரம் என்ற நகரமுண்டு. அங்கு ஒரு வைசியன் வாழ்ந்து வந்தான். இவன் தருமம் தவறாதவன். இவன் பணக்காரனாகவும் இருந்தான். இவன் பெயர் சதிதாசன் என்பதாம். தான்ய விக்கிரயம் வியாபாரம் செய்து வந்தான். இவனுக்கு வியாலாக்ஷி என்ற மனைவியுண்டு. இவர்களுக்கு நிறைய கால்நடைச் செல்வம் இருந்தது. இவன் எருமைக் கன்றுகளையும் ஆடுகளையும் கொன்று வந்தான்.
இவனிடம் ஒருநாள் இவன் பழங்கால மித்திரன் ஒருவன் வந்தான். இவன் நிறைய பணத்துடன் எருமை, பசு இவைகளை வாங்கி வந்தான். வைசியனின் மனைவி, அவனுடன் (நண்பனுடன்) கூடி ரமித்தாள்.
நெடுங்காலம் சென்ற பின் மனைவியும் இறந்தாள். நண்பனும் இறந்தான். அவனும் கங்கையில் மூழ்கி இறந்தான். முறை மீறிய வைசியனின் மனைவி தான் செய்த பாபத்தால் கர்தமம் என்ற நகரத்தில் 60 ஆயிரம் ஆண்டுகள் தண்டனை அனுபவித்தாள். அதன்பின் பாம்பாகப் பிறந்து கங்கையில் இறந்தாள். அதன் பின் மனித ஜன்மம் அடைந்தாள். நான்காம் வருணத்தவளாகப் பிறந்தாள். ஆனால் இவளுக்கு சந்ததி ஏற்படவில்லை. பிறர் செல்வத்தை முழுவதும் அனுபவித்த, பாவத்தால், இவளுக்கு நோய்கள் பற்றிக் கொண்டன. இவளுக்கு அதிகப் பெண் குழந்தைகள் ஏற்பட்டன. அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டது. தன் சொத்தின் 6ல் ஒரு பாகம் தானம் செய்யவேண்டும். பின் சாலையோரங்களில் சத்திரம், கிணறுகள் ஏற்படுத்த வேண்டும். சிவபூஜை முக்கியமாக இரவுகளில் செய்ய வேண்டும். ஒரு லட்சம் பாத்திவ (மண்) லிங்கங்களைப் பூஜிக்கவேண்டும். சிவ பஞ்சாக்ஷரம் எல்லாப் பாபங்களையும் போக்கும். இது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றித் தருவதாகும்.
Please wait while the audio list loads..
Ganapathy
Shiva
Hanuman
Devi
Vishnu Sahasranama
Mahabharatam
Practical Wisdom
Yoga Vasishta
Vedas
Rituals
Rare Topics
Devi Mahatmyam
Glory of Venkatesha
Shani Mahatmya
Story of Sri Yantra
Rudram Explained
Atharva Sheersha
Sri Suktam
Kathopanishad
Ramayana
Mystique
Mantra Shastra
Bharat Matha
Bhagavatam
Astrology
Temples
Spiritual books
Purana Stories
Festivals
Sages and Saints