திருக்கோயில்கள் வழிகாட்டி - திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்களின் புராணம், வரலாறு, பெருமைகள், திருவிழாக்கள், நேரங்கள் போன்றவற்றைப் பற்றிய புத்தகம் இது.

 

PDF புத்தகத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

புராணவரலாறு
ஒருசமயம் பிரமன், திருமாலுக்கிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டுச் சண்டையிட்டனர். அவ்வமயம் அவ்விருவருக்கிடையே ஆதியந்தமிலாத பெருஞ் சோதி ஒன்று எழுந்தது. இச்சோதியின் அடிமுடியை எவர் முதலில் கண்டு வருகின்றார்களோ, அவரே பெரியவர் என்று பெருமான் அச்சோதியிலிருந்து அசரீரியாய்க் கூறினர். பிரமன் அன்னப்பறவை உருவெடுத்து சோதியின் திருமுடியைக் காண மேலே பறந்து சென்றான். திருமால் வராக உருவெடுத்து பூமியைக் குடைந்து சென்றார். பல்லாண்டுகள் தேடியும் சோதியின் (இறைவனின்) திருவடியினைக் காண இயலாமல் திரும்பி வந்து திருமால் தோல்வியை ஒப்புக் கொண்டார். திருமுடியைக் காணச் சென்ற பிரமன் எதிரில் வந்த தாழம்பூவிடம், தான் திருமுடியைக் கண்டதாகப் பொய் சாட்சி சொல்லுமாறு கேட்க, தாழம்பூ கீழிறங்கி வந்து பிரமன், இறைவனின் திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தது. அப்போது சோதியிலிருந்து பெருமான் காட்சியளித்து, பொய்சொன்ன பிரமனுக்குப் பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், தாழம்பூ சிவபூசைக்கு உதவாதென்றும் சாபமிட்டனர். அதன்பின் பிரமனும், திருமாலும் அகந்தை நீங்கிச் சிவபெருமானே உயர்ந்தவர் என்பதை ஒப்புக் கொண்டு, அவ்விடத்து இலிங்க ரூபமாய் எழுந்தருளுதல் வேண்டும் என்று பெருமானிடம் வேண்டினர். அவ்வேண்டுதலுக்கிரங்கிய பெருமான் இலிங்க ரூபமாய் எழுந்தருள் புரிய, அந்த இலிங்கத்தைப் பிரமனும், திருமாலும் பூசித்து வணங்கினர். பெருமான் அக்னி ஸ்தம்பமாய் நின்ற இடம் அருணாசலமாயிற்று. (அருணம், சோணம் - சிவப்பு, நெருப்பு: அசலம் - மலை: அருணாசலம் - செந்நிற மலை) பெருமானும் அருணாசலேசுவரர் எனும் திருப்பெயர் பெற்றார்.
இறைவி இடதுபாகம் பெற்றது
கைலையில் ஒரு சமயம் சிவபெருமானின் கண்களை உமாதேவியார் தனது கைகளால் விளையாட்டாக மூட உலகெலாம் இருண்டது. அதனால் உயிர்களெல்லாம் இன்னலுற்றன. அதற்குக் கழுவாயாகத் தேவியார் கச்சியம்பதியில் மணல் இலிங்கம் ஒன்றினைத் தாபித்துப் பூசை செய்துவரும் வேளையில் பெருமான் தோன்றி, திருவண்ணாமலை சென்று தவமியற்றி தனது இடப் பாகத்தைப் பெறுமாறு அருளிச் செய்தார். அத்திரு வருளின்படி தேவி திருவண்ணா மலையை அடைந்து பவழக்குன்று மலையில் பர்ண சாலை அமைத்து தவஞ்செய்து கார்த்திகைத் தீபநாளன்று பெருமானது இடப்பாகத்தைப் பெற்றனள். அவள் இடப்பாகம் பெற்றதை உணர்த்தும் வண்ணம் கார்த்திகை தீபத்தன்று
மாலை வேளையில் இத்திருக் கோயிலின் கொடிமரத்திற்கு முன்பாக அர்த்த நாரீஸ்வரர் எழுந்தருளும் போது மலை உச்சியில் தீபமேற்றப் படுகிறது. இதனை அன்றொருநாள் மட்டுமே தரிசிக்கவியலும்.
கார்த்திகை தீபச் சிறப்பு
கார்த்திகை மாத முழுநிலவில் வரும் கார்த்திகை தீபம் பற்றி அனைவரும் அறிவர். இவ்விழா சங்க காலத்திலேயே குறிக்கப் பட்டிருக்கிறது. அகநானூறு முதலான நூல்கள் தீப விழாவைச் சிறப்பாகத் தெரிவிக்கின்றன. கார்த்திகை விளக்கிட்டன்ன என்று சீவகசிந்தாமணியும், தலைநாள் விளக்கு என்று கார்நாற்பது எனும்
நூலும் செப்புகின்றன. திருஞானசம்பந்தர் மயிலாப்பூரில், பூம்பாவை உயிர் பெற்றெழப் பாடியபோது, கார்த்திகை விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் என்று தீபவிழாவைக் குறிப்பிட்டதைக் காண்கிறோம். இவ்வாறு மிகப் பழமையும், பெருமையும் உடைய கார்த்திகை தீபம் என்றாலே நினைவுக்கு வருவது இத் திருவண்ணாமலைத் தலமே ஆகும். அன்று மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் தொடர்ந்து பல நாள்கள் எரிவதும் நெடுந்தொலைவுக்குக் காட்சி தருவதும் தலச்சிறப்புடைய தாகும்.
கார்த்திகை தீப தரிசனத்தால் இருபத்தொரு தலை முறைக்கு முத்திப்பேறு கிடைக்கும் என்கிறது அருணாசல புராணம். தனிச்சிறப்பு கொண்ட சந்நிதிகள் யானை திறைகொண்ட விநாயகர்
ஒருசமயம் அண்டை நாட்டைச் சேர்ந்த முகிலன் எனும் அரச னொருவன் போரில் திருவண்ணா மலையைக் கைப்பற்றி தனது படைவீரர்களுடன் தங்கியிருக் கையில், அன்றிரவு யானையொன்று அவனையும், அவனது படை
வீரர்களையும் விரட்டியடிப் பதாகக் கனவு கண்டான். இது குறித்து மறுநாள் விசாரித்தபோது, விநாயகப் பெருமானால் பாதுகாக்கப்பட்டு வரும் புனிதத்தலத்தின் மீது தவறுதலாகப் போரிட்டுத் தங்கியிருப்பதை உணர்ந்தான். தன் தவற்றை உணர்ந்த அவன் விநாயகப் பெருமானைப் பணிந்து மன்னித்தருளுமாறு இறைஞ்சி, அவருக்குத் தன்னுடைய யானைகளைக் காணிக்கையாக அளித்து தனது நாட்டிற்குத் திரும்பினான். இந்த வரலாற்றைக் கொண்ட பெருமான் யானை திறைகொண்ட விநாயகர் என்னும் திருப்பெயர் பெற்று தல விநாயகராகக் கிளி கோபுரத்தி னடியில் எழுந்தருளியுள்ளார்.
சந்பந்த விநாயகர்
செந்தூரம் வழக்கமாக அனுமனுக்கு மட்டுமே பூசி அலங்கரிக்கப்படும். ஆனால் இத்திருத்தலத்தில் கொடிமரம் அருகிலுள்ள விநாயகருக்கும் செந்தூரம் பூசி அலங்கரிக் கின்றனர்.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2023 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |