திருக்கோயில்கள் வழிகாட்டி - திருப்பூர் மாவட்டம்

tirupur mavattam temples guide front page

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களின் புராணம், வரலாறு, பெருமைகள், திருவிழாக்கள், நேரங்கள் போன்றவற்றைப் பற்றிய புத்தகம் இது.

தலைப்புகள் - அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் - அவிநாசி, ஆகாசராயர் திருக்கோயில் - அவிநாசி, மாரியம்மன் திருக்கோயில் - கருவலூர், வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் - மொண்டிபாளையம், இலட்சுமி நரசிம்மப்பெருமாள் திருக்கோயில் - தாளக்கரை, கல்யாணவெங்கட்ரமணசுவாமி திருக்கோயில் - சேவூர், மொக்கணீசுவரர் திருக்கோயில் - மொக்கணீசுவரம், குன்றபுரீசுவரர் திருக்கோயில் - - குன்னத்தூர், ஐராவதேசுவரர் திருக்கோயில்
- அபிஷேகபுரம், உத்தமலிங்கேசுவரர் திருக்கோயில் - பெருமாநல்லூர், கொண்டத்துகாளியம்மன் திருக்கோயில் - பெருமாநல்லூர், செங்கவிநாயகர் திருக்கோயில் - செங்கப்பள்ளி, காசிவிசுவநாதர் திருக்கோயில் - கூனம்பட்டி, திருமுருகநாதசுவாமி திருக்கோயில் - திருமுருகன்பூண்டி, வீரராகவப்பெருமாள் திருக்கோயில் திருப்பூர், விஸ்வேஸ்வரசுவாமி திருக்கோயில் - திருப்பூர், விசுவேசுவரர் திருக்கோயில் - நல்லூர், அங்காளம்மன் திருக்கோயில் - முத்தணம்பாளையம், கைலாசநாதர் திருக்கோயில் - ஊத்துக்குளி, வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில் - கதித்தமலை, வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில் - அய்யம்பாளையம், சுக்ரீசுவரர் திருக்கோயில் - சர்க்கார்பெரியபாளையம், முத்துகுமாரசுவாமி திருக்கோயில் - அலகுமலை.

PDF புத்தகத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

அருள்மிகு வீரராகவப்பெருமாள் திருக்கோயில்
திருப்பூர் இறைவன் அருள்மிகு வீரராகவப்பெருமாள் இறைவி
கனகவல்லி தாயார், பூமாதேவி தாயார் தல விருட்சம் மகிழ மரம் ஆகமம்
பாஞ்சராத்ராகமம் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள திருக்கோயில். காஞ்சி மாந்தியின் தென்பகுதியில் அமைந்துள்ள சிறப்பானவைணவத்தலம்.
- மகாபாரதக் கதையில், விராட பருவம் எனும் பகுதியைச் சுற்றி அமைந்த தலவரலாற்றைக் கொண்டது. பாண்டவர்கள் எவரும் அறியாமல் அஞ்ஞாதவாசம் இருந்த நாட்களில், கௌரவர்கள் அவர்களது பசுக்களை ஒட்டிச் செல்ல, பாண்டவர்கள் அவர்களை விரட்டியடித்து பசுக்களை மீட்டனர். பசுக்களைத் திருப்பி அழைத்து வருகையில், இத்தலத்தில் திருமாலை வணங்கினராம்.
- அழகிய மூன்று நிலை இராஜகோபுரத்துடன் கூடிய திருக்கோயில், இரண்டு சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டபடி, கிழக்கு திசையை நோக்கியவாறு அமைந்துள்ளது. தெற்கில் திருமுகமும், வடக்கில் திருவடியும் கொண்டு புஜங்க சயனத்தில், அழகுறக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார் வீரராகவப் பெருமாள்.
சயனக்கோலத்தில் இருந்தாலும், மரக்கால் படி
ஒன்றைத் தலைக்கு வைத்தபடி, பக்தர்களைப் பார்த்தபடி காட்சி தருவது வீரராகவப் பெருமாளின் தனிச்சிறப்பு, சிறப்பு வழிபாடு நாட்களில் முத்தங்கி சேவை, நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளும். படியளந்த பெருமாள் என்றும் வேறு ஒரு திருநாமம் உண்டு.
கனகவல்லித் தாயார் என்ற திருநாமத்துடன் தனிச் சந்நிதி கொண்டுள்ளார். ஸ்ரீதேவி, உற்சவர் மகாலட்சுமித் தாயார். வியாசராயர் பூஜித்த ஆஞ்சநேயர் திருமேனி, பழமையானது. வெற்றிலை மாலை சார்த்தி வழிபடுதல், இவரது சந்நிதியில் தனிச்சிறப்பு ஆகும்.
பெருமாளுக்கு திருவோணம் நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதுபோல, திருஆதிரை நாட்களில் கருடாழ்வாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
உக்கிர நரசிம்மரும், யோக நரசிம்மரும் புடைப்புச் சிற்பமாக அமையப்பெற்ற கல்தூண் ஒன்று, பக்தர்களின் கவனத்தைக் கவருவதாக உள்ளது. 16 கால் மண்டபம் ஒன்று இங்கே இருந்ததாகவும், காலப்போக்கில், அது உருக் குலைந்து, ஒரு கல்தூண் மட்டுமே மிச்சம்! என்பர்.
வைகாசி மாதத்தில் நடைபெறும் பெருவிழாவில், அருகில் உள்ள சிவாலயத்தின் விசுவேசுவரரும் பெருமாளும் ஒன்றாகத் தேரில் வலம் வருவது, திருப்பூருக்கே உள்ள தனிச்சிறப்பாகும்.
நாள்தோறும் மூன்று கால வழிபாடு நடைபெறுகிறது.
அன்னதானம்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அன்னதானத் திட்டத்தின்கீழ் பக்தர்களுக்கு மதியம் 12.15 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திருக்கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி - பகல் 12.00 மணி மாலை 4.00 மணி - இரவு 8.00 மணி தொலைபேசி: 0421-2204101

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |