திருக்கோயில்கள் வழிகாட்டி - கன்னியாகுமரி மாவட்டம்

kanyakumari mavattam temples guide pdf cover page

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களின் புராணம், வரலாறு, பெருமைகள், திருவிழாக்கள், நேரங்கள் போன்றவற்றைப் பற்றிய புத்தகம் இது.

தலைப்புகள் - பகவதி அம்மன் திருக்கோயில் - கன்னியாகுமரி,  தாணுமாலயன் திருக்கோயில் - சுசீந்திரம்,  நாகராஜா திருக்கோயில் - நாகர்கோவில்,  குகநாதீஸ்வரர் திருக்கோயில் - கன்னியாகுமரி,  சோழராஜா திருக்கோயில் -  நாகர்கோவில்,  தழுவிய மகாதேவர் திருக்கோயில் - நாகர்கோவில், அகஸ்தீஸ்வரமுடைய நயினார் திருக்கோயில் - அகஸ்தீஸ்வரம்,   கிருஷ்ணசுவாமி திருக்கோயில் - நாகர்கோவில்,  மதுசூதனப்பெருமாள் திருக்கோயில் -  பறக்கை,  துவாரகை கிருஷ்ணன் திருக்கோயில் - சுசீந்திரம்,  பொலிந்து நின்றருளிய பெருமாள் திருக்கோயில் - கோதை கிராமம்,  பொன்பொருந்தி நின்றருளிய பிரான் திருக்கோயில் - ஏழகரம்,   பெருமாள் திருக்கோயில் -  புரவசேரி,  அழகம்மன் திருக்கோயில் -  வடிவீஸ்வரம்,  முன்னுதித்த நங்கையம்மன் திருக்கோயில் -  சுசீந்திரம்,  சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - மருங்கூர்

PDF புத்தகத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

54.2K

Comments

xtfps
அறிவு வளமான இணையதளம் -நந்தன் முருகன்

அறிவுப் பொக்கிஷமான வலைத்தளம் -விநோத்

பயனுள்ள தகவல்களை வழங்கும் வலைத்தளம் -ராமனுஜம்

அறிவு வளர்க்கும் இணையதளம் 🌱 -சித்ரா

அறிவு செழிக்கும் இணையதளம் -சுவேதா முரளிதரன்

Read more comments

பெண் ரிஷி எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

பெண் ரிஷி ரிஷிகா என்று அழைக்கப்பட்டனர்.

வேதத்தை இயற்றியது யார்?

வேதம் அபௌருஷேய என்று கூறப்படுகிறது. அவ்வாறு கூறப்படும் காரணம், வேதத்திற்கு ஆசிரியர் இல்லை. வேதம் என்பது பல காலம் கடந்து முனிவர்களின் அறிவிலிருந்து மந்திரங்களாக வெளிப் பட்டதாகும்.

Quiz

கிழக்கு திசையை பாதுகாக்கும் தேவர் யார்?

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மருங்கூர், அகஸ்தீஸ்வரம் வட்டம்.
இறைவன் இறைவி ஆகமம்
- அகஸ்தீஸ்வரம்
வள்ளி தெய்வாணை சிவாச்சாரியமரபு
அமைவிடம்
மருங்கூர் என்ற ஊர் நாகர்கோவில் கன்னியாகுமரி சாலையில் இருக்கும் சுசீந்திரம் பழையாறு பாலத்தில் இருந்து வடகிழக்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊருக்கு நாகர்கோவிலிலிருந்து பஸ்வசதி உண்டு. கோயில் அடிவாரம் வரை வாகனம் செல்லும்
சுமார் 90 அடி உயரமும் 22 ஏக்கர் பரப்பும் கொண்ட இந்த சிறு மலை மேற்கு தொடர்ச்சி மலையின் தென்கோடியில் இருக்கும் இடமலை தொண்டு என்ற கணவாயிலிருந்து துண்டுப்பட்டு கிடப்பது. இம்மலையை சித்தர் மலை, மங்கள மலை, வேள்வி மலை, மயூர மலை என்றும் வேறு பெயர்களில் அழைக்கின்றனர். இம் மலையை கிரிவலம் வர சாலைகள் உண்டு. இம்மலையின் மேலிருந்து சுற்றிப்பார்ப்பது தனி அனுபவம். உயர்ந்த தென்னைமரங்கள், நீர் நிலைகள், வயல் வெளிகள் போன்றவை பரவசமூட்டும்.
கோயிலின் அமைப்பு:
குன்றில் உள்ள முருகன் கோயிலுக்கு குன்றின் அடி வாரத்தில் தெற்கே இருந்து இருபுறமும் கைப்பிடி கம்பிகள் கொண்ட 80 படிகள் வழியாக ஏறியோ அல்லது கிழக்கே நீராழியிலிருந்து சரிவான பாறை ஒன்றின் வழி ஏறிச்சென்றோ கோயிலை அடையலாம். மலை அடிவாரத்தில் நீராளியும், காவடி மடமும், மாடன் இசக்கி பூதத்தான் கோயில்களும் உள்ளன.
கோயிலின் கிழக்கு திசையிலும், தெற்கு திசையிலும் பெரிய தோரண வாயில்கள் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. முதல் பிரகாரம் வெட்ட வெளியால் ஆனது. கோயிலைச் சுற்றி உயர்ந்த மதில் சுவர் உண்டு. வெளிப்பிரகாரத்தில் கோயிலின் அலுவலகம், வாகன அறை உள்ளது.
கோயில் பலிபீடத்தின் மேற்கே தென் வடல் சிறகுகளுடன் கிழக்கே முன்தள முகப்புடன் கூடிய முகப்பு மண்டபம், இங்கு மூன்று பரிவார தெய்வக் கோயில்கள் உள்ளன. முகப்பு மண்டபத்தை அடுத்து உட்பிரகாரம் இங்கே மயில் மண்டபம் சுற்றிலும் இடைவெளி தெற்கே ஊட்டுப்புரை, மடப்பள்ளி, கருவறை, அந்தராளம் என இரு பகுதி உள்ளது. இதன் கட்டுமானப்பணி 16ஆம் நூற்றாண்டு என தெரிகிறது.
தலபுராணம்:
இக்கோயிலின் தலபுராணம் தனிப்பட்ட முறையில் எழுதி வைக்கப்படவில்லை. ஆனால் சுசீந்திரம் கோயில் தலபுராணத்தில் இக்கோயில் தொடர்பான கதை வருகிறது. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ள சுசீந்திரம் தலபுராணம் 15- ஆம் சருக்கத்தில் மருங்கூர் சுப்பிரமணியர் தொடர்பான செய்திகள் தரப்பட்டுள்ளன. தாணுமாலையன் அருளால் தூய்மைப்பெற்ற தேவேந்திரன் தேவலோகம் சென்றதும் அவனது வாகனங்களில் உச்சை சிரவத்தை மருங்கூர் செல்ல ஆணையிடுகிறார் தாணுமாலையன். அப்போது மருங்கூர் கோயில் பேசப்படுகின்றது. மருங்கூர் கோயிலில் வள்ளி மணவாளன் கோயில் கொண்டிருக்கிறான். அவனை அர்ச்சிப்பாய் என தாணுமாலைலயன் கூறியதும் உச்சை சிரவம் குதிரை என்னால் எப்படி முருகனை அர்ச்சிக்க முடியும் என கேட்க தாணுமாலயன் அனந்தனையும் உன்னுடன் அழைத்துச் செல் என்றார். அது போலவே முருகனை வழிபட்டு குதிரை முக்தி பெற்றது. அது முதல் இத்தலம் வாஜிபுரம் என வழங்கப்பட்டது.
இக்கோயிலில் முருகன் குதிரை வாகனத்தில் வலம் வருகிறான். சுசீந்திரம் தலபுராணம் சுசீந்திரத்திற்கு வடகிழக்கே சித்தசைலம் ஒன்று இருந்ததாக கூறும் அந்த சைலம் மருங்கூர் தான். இங்கு ஞானிகள் பலர் வந்து ஜீவன் முக்தர்களாய் உள்ளனர். திருநாராயண குரு இத்தலத்திற்கு வந்து தவம் செய்திருக்கிறார். சட்டம்பி சுவாமிகள் என்ற சித்தர் இங்கு வந்திருக்கிறார். திருவனந்தபுரம் அபேதானந்த சுவாமிகள் பல நாட்கள் இங்கே தங்கியிருக்கிறார். திருவஞ்ச நல்லூர் சிதம்பரசுவாமிகள் இங்கே தங்கி பல துறவிகளுக்கு ஞானோபதசம் செய்துள்ளார்.
மூலவர் வடிவம்:
இக்கோயில் கருவறை மூலவர் சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். 100 செ.மீ உயரக் கல் படிமம், மூலவரும் திருவாட்சியும் ஒரே கல். நான்கு கைகள்; அபய வரத கரங்கள் சக்தியாயுதமும் அபயமும் தாங்கிய இரு கைகள். மயில் மீது சாய்ந்து நிற்கிறார். இருபுறமும் வள்ளி தெய்வானை மூலவரின் முன் கரங்கள் ஒருமுறை உடைந்து விட்டது. அதனால் பஞ்சலோகத்தால் கரங்கள் பொருத்தப்பட்டன.
பரிவார தெய்வங்கள்:
சிவன் - முகப்பு மண்டபம் வடபால் காசிலிங்கசாமி லிங்க வடிவம் இது சித்தர் ஒருவரின் சமாதி எனப்படுகிறது.
பூதத்தான் - குலசேகர விநாயகரை அடுத்து இருப்பது. ஒவ்வொரு நாளும் இறுதி பூஜை இவருக்கு. இவர் இம்மலையின்

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |