சங்கரன்கோவில்

Sankaran kovil temple

 

முக்கியமான தெய்வங்கள்

 

சங்கரலிங்கம், கோமதி அம்மன் மற்றும் சங்கர-நாராயணர்.

 

சங்கர நாராயணர்

 

இறைவன் சங்கர நாராயணர் என்பது சிவன் மற்றும் விஷ்ணுவின் இணைந்த உருவமாகும். முன்பு ஒரு காலத்தில் சங்கன் மற்றும்  பத்மன் என்ற இரண்டு பெரிய பாம்புகள் இருந்தன. சங்கன் ஒரு சிவ பக்தனாவான். பத்மன் ஒரு விஷ்ணு பக்தன். ஒரு சமயம் இருவருக்குமிடையில் சிவன்  மற்றும் விஷ்ணுவில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் தொடங்கியது. இதற்குத் தீர்வு காண்பதகர்க்காக அவர்கள் இருவரும் தேவி பார்வதியிடம் சென்றனர். அவர் தவம் இருந்து சிவன் மற்றும் விஷ்ணுவிடம், அவர்களின் ஒருங்கிணைந்த உருவத்தைக் காட்டுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

 

சங்கர நாராயணரின் உருவ அமைப்பு

 

அர்த்தநாரீஸ்வர் உருவத்தில் எவ்வாறு சிவன் வலது புறத்திலும், பார்வதி இடது புறத்திலும் இருக்கிறார்களோ, அதுபோலவே தான் சங்கரநாராயணரின் உருவத்திலும் வலதுபுறத்தில் சிவனும், இடது புறத்தில் நாராயணரும் இருக்கிறார்கள். சங்கரன்கோவிலில் இருக்கும் சிலையின் வலது பாதி சிவனாகவும், இடது பாதி நாராயணராகவும் அமையப் பெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாக, வலது புறத்தில் இருக்கும் மேல் கையில் சிவனின் ஆயுதமான மழு இருக்கிறது. அதேபோல இடது புறத்தின் மேல் கையில் விஷ்ணுவின் ஆயுதமான சங்கு இருக்கிறது. ஆடையின் வலது பாதி ஆடை புலித்தோலாகவும்,  இடது பாதி பீதாம்பரமாகவும்  அமையப் பெற்றிருக்கிறது. சிவனின் பகுதியில் பிறைச் சந்திரனையும், ஜடையும், கங்கையும், அக்னியும் மற்றும் ருத்ராட்சமும் அணியப் பெற்று இருக்கிறது. விஷ்ணுவின் பாகத்தில் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மகுடமும், குண்டலமும், துளசி மாலையும் மற்றும் லக்ஷ்மியை மார்பிலும் அணியப்பட்டு இருக்கிறது. துளசி தீர்த்தமும், விபூதியும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 

சங்கரலிங்கம்

 

சிவனும் விஷ்ணுவும் பாம்புகளுக்கு இணைந்து காட்சி கொடுத்தபின், சிவன் பார்வதிக்குத் தனிமையில் தரிசனம் கொடுத்தார். அதுவே சங்கரலிங்கமாகி, விரைவாகவே அதன்மேல் எறும்புப் புற்றால் மூடப்பட்டது. அந்த எறும்புப் புற்றுக்குள் அந்த பெரிய இரண்டு பாம்புகளும் வசித்தனர். பின்பு யவரோ ஒருவர் புற்றை உடைக்க முயன்றபோது, அதன் உள்ளேயிருந்து ரத்தம் வந்தது. அந்த லிங்கம் அங்கு இருப்பதைக் கண்டுபிடித்தவராகிய மணிக்கிரீவன் என்பவர், சாபத்தின் காரணமாகப் பூமியில் பிறப்பெடுத்த குபேரனின் மகனாவார். மன்னன் உக்கிரபாண்டியனிடம் இத்தகவல் தெரியப்படுத்தப்பட்டது. அவன் இவ்விடத்தில் கோயில் கட்டுவதற்கு ஆணையிட்டான். பாம்புப் புற்றுக்கு வன்மீகம் என்று தமிழில் பெயர். சங்கரலிங்கம் வன்மீகநாதர் என்றும் போற்றப்படுகிறது. எரும்பு புற்றிலிருந்து (பாம்பு புற்று) எடுக்கப்படும் மண் குணப்படுத்தும் தன்மை உள்ளதாக அறியப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. எவரொருவர் பாம்பினாலோ அல்லது வேறு ஏதாவது விஷ பிராணிகளாலோ வேதனையுற்றால் அவர்கள் இங்கு வந்து வெள்ளியிலான உருவத்தை குணம் அடைவதற்காகச் சமர்ப்பிக்கிறார்கள். வசந்த சம இரவு நாள்களிலும் (அதாவது மார்ச் மாதம் 20-21), இலையுதிர் உத்தராயன சம இரவு நாள்களிலும் (அதாவது செப்டம்பர் மாதம்22-23) சூரியனின் ஒளி லிங்கத்தின் மீது நேராக விழுகிறது.

 

கோமதி அம்மன்

 

கோமதி அம்மன் வன்மீக நாதரின் துணைவியார் ஆவார். அவர்களின் சந்நிதியின் அருகில் ஒரு துளையினுள் ஸ்ரீசக்கரம் அமைந்திருக்கிறது. அதற்கு ஆக்ஞாசக்கரம் என்று பெயர். கோமதி அம்மன் மனக்கோளாறை குணப்படுத்துகிறாள். அம்மன் தவமிருக்கும் சமயத்தில் பல பசுக்கள் அவருக்குச் சேவை செய்தன. ஆகையால் அவருக்குக் கோமதி என்று பெயர். நல்ல திருமணம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் விருப்பமுள்ள பக்தர்கள் கோமதி அம்மனுக்கு மாவினால் செய்யப்பட்ட விளக்கில் (மாவிளக்கு) நெய் ஊற்றி விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.

 

நாகசுனை தீர்த்தம்

 

சங்கரன்கோவில் கோயிலில் இருக்கும் புனித சுனையின் பெயர் நாக சுனை தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தம்  நோய்களை குணமாக்கும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது.

 

திருவிழாக்கள்

 

1.ஆடி தபசு - இது அம்மன் தவமிருந்ததின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. 

  1. பங்குனி மாதத்தில் சித்திரை நாளில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம்.
  2. ஐப்பசிமாதத்தில் கொண்டாடப்படும் திருக்கல்யாண உற்சவம். 
  3. தை மாதத்தில் கொண்டாடப்படும் தெப்போற்சவம்.

 

திறந்திருக்கும் நேரம்

 

காலை மணி 5 முதல் மதியம் 12.30 வரை. பிறகு மாலை  4 மணி முதல் 9 மணி வரை.

 

விலாசம்

 

ஸ்ரீ சங்கர நாராயணர் கோயில்

சங்கரன்கோவில் 

திருநெல்வேலி மாவட்டம் 

தமிழ்நாடு

அஞ்சல் குறியீடு: 627 756

 

தொடர்பு கொள்ளவேண்டிய எண்

 

04636-222265

 

சங்கரன்கோயில் கோவிலின் தொலைவு

 

மதுரையிலிருந்து 120 கிலோமீட்டர் 

ராஜபாளையத்திலிருந்து 30 கிலோமீட்டர் திருநெல்வேலியிலிருந்து 56 கிலோ மீட்டர்

 

Google Map Image

 

Add to Favorites

Other languages: English

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |