இறைவன் சிவன். அவர் துணைவியாரின் பெயர் ஞானபிரசுனாம்பிகா ஆகும்.
Click below to watch video - ஸ்ரீ காளஹஸ்தி கோவிலின் வரலாறு
ஸ்ரீகாளஹஸ்தி என்ற பெயர் மூன்று பாகங்களால் ஆனது. ஸ்ரீ என்றால் சிலந்தி,
காள என்றால் பாம்பு மற்றும் ஹஸ்தி என்றால் யானை ஆகும். ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரன் ஆகிய சிவன், இம் மூவரின் சிறந்த பக்தியை பாராட்டி மோக்ஷம் அருளினார். அவர்கள் தங்கள் பக்தியின் உச்சத்தில் தங்கள் உயிரை அழிக்கவும் தயாராக இருந்தனர்.
சிலந்தி அதன் வலையை பாதுகாப்பாக சிவலிங்கத்தை சுற்றி பின்னி அதிலிருந்து முழு நேரமும் பிரார்த்தனை செய்தது. இறைவன் தன் பக்தனின் பக்தியை பரிசோதிக்க நினைத்தார். ஒரு நாள் காற்றின் காரணமாக விளக்கிலிருந்து கோவில் தீப்பிடித்தது. அந்த சிலந்தி, தன் உயிரை பற்றி கவலைப்படாமல் மூர்க்கமாக தீயுடன் போராடியது. அதனால் அந்த சிலந்திக்கு மோக்ஷம் கிட்டியது.
ஒரு பாம்பு நாகலோகத்திலிருந்து விலைமதிப்பில்லாத ரத்தினங்களை கொண்டுவந்து சிவலிங்கத்துடன் சேர்த்து வைத்து பிரார்த்தனை செய்தது. அதன்பின் யானை ஒன்று வில்வ இலைகளையையும், பக்கத்தில் உள்ள ஆற்றிலிருந்து தண்ணீரும் கொண்டு வந்தது. அந்த யானை ரத்தினங்களை மாற்றி வைத்து விட்டு தான் கொண்டுவந்த பொருட்களை வைத்து பிரார்த்தனை செய்தது. அந்தப் பாம்பு மறுநாள் அங்கு வந்த போது, ரத்தினங்கள் வைத்த இடத்தில் இல்லாமல் அங்கு இலைகள் இருப்பதை கண்டது. அது இலைகளை மாற்றி, அவ்விடத்தில் ரத்தினங்களை மீண்டும் வைத்தது. பாம்பு சென்றபின், யானை இலையுடனும் தண்ணீருடனும் வந்தது. அது ரத்தினங்களை மாற்றி இலையையும் தண்ணீரும் வைத்து பூஜை செய்தது. இவ்வாறாக சில நாட்கள் சென்றன. பாம்பிற்கு கோபம் வந்து, இவ்வாறாக யார் ரத்தினங்களை மாற்றுகிறார்கள் என்ன அறிந்துக்கொள்ள நினைத்தது. அது பூஜை முடிந்தபின் தன்னை மறைத்து நின்று கொண்டது. யானை செய்வதை பார்த்ததும், அது யானையின் தந்தத்தின் வழியாக உள்ளே நழுவிச் சென்று கொத்தியது. யானை தன் முகத்தை, அருகே உள்ள சுவற்றில் அடித்து நொறுக்கி தன்னையும் பாம்பையும் மாய்த்துக் கொண்டது.
காளஹஸ்தீஸ்வரர். சிலந்தி, பாம்பு மற்றும் யானையுடைய தும்பிக்கையின் சின்னங்கள் சிவலிங்கத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது
ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் யார் உயர்ந்தவர் என்ற சண்டை வந்தது. ஆதிசேஷன் தன்னை கைலாச மலையை சுற்றி வாயுதேவன் உள்ளே வர முடியாதபடி சுருட்டிக் கொண்டது. வாயு தேவன் சூறாவளியை உருவாக்கி அதை உடைக்க நினைத்தார். இதன் காரணமாக கைலாசத்தின் ஒரு சிறிய துண்டு எட்டு பகுதிகளாக சிதறி வெவ்வேறு பகுதிகளில் விழுந்தது. அவை ஸ்ரீ காளஹஸ்தி, .திருண்கோமலை, திருச்சிராமலை, திருஈங்கோய்மலை, ரஜத கிரி, நீர்த்தகிரி, ரத்னகிரி மற்றும் திருப்பைஞ்ஞீலி ஆகும். சிவன் பிரம்மாவிடம் காளஹஸ்தியில் மலையை வைக்குமாறு கூறினார். அதுவே ஸ்ரீ காளஹஸ்தி - தென் கைலாசமாக மாற காரணமானது. அந்த மலை சிவானந்தைக நிலையம் மற்றும் கண்ணப்ப மலை என்று பெயர் பெற்றது.
கண்ணப்பர் அறுபத்தி மூன்று சைவ நாயன்மார்களில் ஒருவராவார். அவர் அர்ஜுனனின் மறுபிறப்பாகும். அவர் ஒரு வேடனாகப் பிறந்தார். அவரின் இயற்பெயர் திண்ணன். அவர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் மிகப் பெரிய பக்தராவார்.
அவர் வேடன் ஆகிய காரணத்தால், தான் வேட்டையாடிய மிருகத்தின் மாமிசத்தை இறைவனுக்கு படைப்பார். அவர் அருகிலுள்ள சுவர்ணமுகி ஆற்றிலிருந்து நீரை தன் வாயில் எடுத்து வந்து பகவானுக்கு அபிஷேகம் செய்வார். அவர் தினமும் இதை தவறாமல் நடத்திக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் இறைவன் அவருடைய உண்மையான பக்தியை சோதனை செய்ய எண்ணம் கொண்டார். கண்ணப்பர், லிங்க வடிவில் இருக்கும் இறைவனின் ஒரு கண்ணிலிருந்து ரத்தம் வடிவதை பார்த்தார். அவர் தன் கண்ணிலிருந்து ஒரு கண்ணை உடனே எடுத்து அவ்விடத்தில் வைத்தார். உடனே லிங்கத்தில் இருக்கும் இரண்டாவது கண்ணிலிருந்தும் ரத்தம் வழியத் தொடங்கியது. அவர் தனது இரண்டாவது கண்ணை எடுத்து முன் யோசனை செய்தார்: நான் முழுவதும் குருடன் ஆகி விட்டால் கண் வைக்கும் இடத்தை எவ்வாறு அறிவேன் என்று எண்ணி அவர் தன்னுடைய கால் கட்டை விரலை, லிங்கத்தின் கண் இருக்கும் இடத்தில் அடையாளமாக வைத்தார். அவர் தன் இரண்டாவது கண்ணை எடுக்கும் முன், இறைவன் அவரைத் தடுத்தார். இறைவன் அவருடைய கண்களை அவருக்கே திரும்ப வழங்கினார்.
தன் கண்ணை தானே இறைவனுக்கு தந்த காரணத்தினால் திண்ணன், கண்ணப்பராக புகழ் பெற்றார்.
ஐந்து முக்கியமான சிவலிங்கங்கள் பஞ்சபூத லிங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு லிங்கமும் தனித்தனியாக பஞ்சபூதங்களில் ஒவ்வொன்றையும் குறிக்கின்றது.
வாயு பகவான் பல காலமாக கற்பூர சிவலிங்கத்தை வழிபட்டுக் கொண்டிருந்தார். இறைவன் சிவன் அவர் முன் தோன்றியபோது, வாயு பகவான் மூன்று வரங்களைக் கேட்டார்.
இதனால் காளஹஸ்தியில் இருக்கும் அந்த லிங்கமானது வாயு லிங்கம் என்று அறியப்படுகிறது.
இந்தக் கோவில் முதல் முதலில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. 11வது நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் புனரமைத்து, முக்கிய கட்டமைப்பை கட்டிமுடித்தார். கி.பி.1516 இல் கிருஷ்ணதேவராயர் 100 தூண்கள் உள்ள மண்டபத்தை கட்டினார். பல சோழ மன்னர்களும் மற்றும் விஜயநகர வம்சத்தில் வந்தவர்களும் இக் கோவிலை கட்டுவதிலும், அதை பராமரிப்பதிலும் தங்களுடைய பங்களிப்பை அளித்து இருந்தனர்.
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் பகவதியின் பெயர் சிவஞானம் எனும் ஞானபிரசுனாம்பிகா ஆகும். முன்னொரு சமயம் சிவபெருமான் பார்வதியை பூமியில் பிறக்கும்படி சாபமிட்டார். தேவி ஸ்ரீ காளஹஸ்தியில் தவமிருந்தார். பகவான் சிவபெருமான், தேவிக்கு முன்பை விட மிகவும் அழகு உள்ள தெய்வீகமான உடலை அருளினார்.
சுவர்ணமுகி எனும் காளஹஸ்தியில் இருக்கும் நதி திவ்ய கங்கா என்றும் அழைக்கப்படுகிறது.
ராகு, கேது தோஷத்தினால் துன்பப்படுபவ்ரகளுக்கு, சர்ப்ப தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் நீங்குவதற்கு காளஹஸ்தியில் ராகு-கேது பூஜை செய்கிறார்கள். அந்த பூஜை ராகு காலத்தில் நடத்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
கோவில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்ககிறது. சனி ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் கோவில் நடை 9.30 மணிக்கு மூடப்படும்.
08578-222240.
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சுவாமி தேவஸ்தானம்,
ஸ்ரீ காலஹஸ்தி.
அஞ்சல் குறியீடு : 517 644
ஆந்திரப் பிரதேசம்.
திருப்பதியிலிருந்து காளஹஸ்தி: 36 கிலோமீட்டர்.
சென்னையிலிருந்து காளஹஸ்தி: 113 கிலோ மீட்டர்.
ஸ்ரீகாளஹஸ்தி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கோவில்: 3 கிலோமீட்டர் தூரம்.
Astrology
Atharva Sheersha
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rituals
Rudram Explained
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta