அகாசுரன் வதம்

Other languages: EnglishTeluguKannada

இது சிறிய கிருஷ்ணன் பெரிய சூழ்ச்சியுடய அகாசுரன் என்ற அசுரனை அழித்த கதை.

அகாசுரன் என்பவன் யார்?

அகாசுரன் கம்சனின் படைத் தலைவனாவான். அகம் என்றால் சம்ஸ்க்ருதத்தில் பாவம், அதை செய்பவன் அகாசுரன்.

கம்சன் என்பவன் யார்?

கம்சன் பகவான் கிருஷ்ணனின் தாய்மாமன் ஆவார். அவன் மிகுந்த கொடுங்கோலனும் மற்றும் சூழ்ச்சி நிறைந்தவனாவான். அவன் தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து மதுராவிற்கு அரசனானான்.

எதற்காக கிருஷ்ணனின் பெற்றோர்களை கம்சன் சிறையில் அடைத்தான்?

கிருஷ்ணனின் பெற்றோர்களின் திருமணத்தின் போது, அவர்களின் எட்டாவது குழந்தை கம்சனை அழிக்கும் என்று ஒரு குரல் கேட்டது. இதன் காரணமாக கம்சன் அவர்களை சிறையில் அடைத்து, அவர்களுக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் பிறந்தவுடன் கொன்றான்.

கிருஷ்ணன் சிறையிலிருந்து எவ்வாறு தப்பித்தான்?

கிருஷ்ணன் எல்லாம் வல்லவன் ஆவான். அவன் பிறந்த உடன் அவன் தந்தை வசுதேவருக்கு அவனை சிறையிலிருந்து வெளியே எடுத்துச் செல்லுமாறு தீர்க்கதரிசியின் குரல் கேட்டது. உடனே பகவான் கோகுலதிற்கு வசுதேவரின் உறவின சகோதரரான நந்தரின் வீட்டிற்கு எடுத்துச் சென்று வைக்கப்பட்டார். அங்கு நந்தனுக்கும் யசோதாவிற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து இருந்தது அக்குழந்தை சிறைச்சாலைக்கு எடுத்துவரப்பட்டாள்.

அந்த பெண் குழந்தைக்கு என்ன நேர்ந்தது?

அக்குழந்தை பெண்ணாக இருந்தும் கம்சன் அவளைக் கொள்வதற்கு முயன்றான்.
அக்குழந்தை மகா சக்தியின் மறு உருவமாகும். அவள் கம்சனின் பிடியிலிருந்து விலகி மறைந்தாள். அவள் பகவதி விந்தியவாசினியாக வழிபடப் படுகிறாள்.

கிருஷ்ணன் உயிருடன் இருப்பதை அறிந்து கம்சன் என்ன செய்தான்?

கம்சன் கிருஷ்ணனைக் கொல்வதற்காகப் பல அசுரர்களை அனுப்பினான். அவர்களில் ஒருவன்தான் அகாசுரன்.

அகாசுரன் கோகுலத்தில் என்ன செய்தான்?

அகாசுரன் பலவிதமான மாயசக்திகளைப் பெற்றிருந்தான். அவன் ஆகாய வழியாக வந்துகொண்டிருந்தபோது கிருஷ்ணனும் அவன் தோழர்களும் காளிந்தியின் கரையோரம் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். உடனே அவன் மிகப் பெரிய பாம்பின் உருவம் எடுத்து வாயைப் பிளந்துகொண்டு தரையில் படுத்து இருந்தான். பிள்ளைகள் அனைவரும் அதைக் குகை என்று நினைத்துக்கொண்டு அதன் உள்ளே சாதாரணமாகச் சென்றனர்.கிருஷ்ணனும் மற்றும் அனைத்து பிள்ளைகளும் உள்ளே சென்றவுடன் அகாசுரன் தன் வாயை மூடிக்கொண்டு அனைவரையும் நொறுக்க தொடங்கினான்.இதில் சில பிள்ளைகள் இறந்தனர்.

கிருஷ்ணன் எவ்வாறு அகாசுரனை கொன்றான்?

கிருஷ்ணன் தானாக பெரிதாக வளரத் தொடங்கினான். அவன் மிகப்பெரிதாக வளர்ந்தவுடன் அசுரனின் உடல் தானாக வெடித்து திறந்தது. அகாசுரன் மரணமடைந்தான். கிருஷ்ணன் தன்னுடைய திவ்ய சக்தியினால் இறந்தவரை மீட்டான். அனைவரும் பத்திரமாக வெளியே வந்தனர். இவ்வாறாக கம்சனின் தீய திட்டம் அழிந்தது.

Author

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Recommended for you

பகலாமுகி ஸூக்தம்

Audios

Copyright © 2022 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Active Visitors:
2627773